Monday, 30 April 2018


சிவகங்கையில் செங்கொடி நிகழ்வுகள்….
மாவட்டச்செயற்குழு…
மேதினச்சிறப்புக்கூட்டம்…
தெருமுனைப்   பிரச்சாரம்..
சிவகங்கை கிளை மாநாடு..
பணி நிறைவு பாராட்டு விழா…

09/05/2018 – புதன்கிழமை –
காலை 09.00 மணி - சிவகங்கை

சிறப்புரை
 அனுபவமிகு… ஆற்றல் மிகு…
NFTE
அகில இந்தியத் துணைத்தலைவர்
தோழர்.C.K.மதிவாணன்

மற்றும் தோழர்கள்….
 தோழர்களே… வருக…

உழைப்பாளி... கொடி... உயரட்டும்…
NFTE – NFTCL – AITUC – AIBSNLPWA

இணைந்த மேதினக்கொடியேற்றம்
------------------------------------------------------------------------------------------------------------------
காரைக்குடி 
01/05/2018 – செவ்வாய்
காலை 10.00 மணிபொதுமேலாளர் அலுவலகம்
காலை 10.30 மணி – RSU தொலைபேசி நிலையம்
காலை 11.00 மணிகல்லுக்கட்டி தொலைபேசி நிலையம்
காலை 11.30 மணி – D-TAX தொலைபேசி நிலையம்

பங்கேற்பு : தோழர்கள் 
பழ.இராமச்சந்திரன் – AITUC
பெ.முருகன் – AIBSNLPWA
சி.முருகன் - NFTCL
வெ.மாரி - NFTE
-------------------------------------------------------------------------------- 
பரமக்குடி
01/05/2018 – செவ்வாய்காலை 11.00 மணி
தொலைபேசி நிலையம்பரமக்குடி

பங்கேற்பு : தோழர்கள் 
SP.இராதா – AITUC
A.காசிநாதன் – AIBSNLPWA
C.மோகன் – NFTCL
A.தமிழரசன் – NFTE
-------------------------------------------------------------------------------- 
சிவகங்கை
01/05/2018 – செவ்வாய்மதியம்  01.00  மணி
தொலைபேசி நிலையம்சிவகங்கை

பங்கேற்பு : தோழர்கள் 
M.சகாயம் – AITUC
A.சந்திரன் – AIBSNLPWA
B.முருகன் – NFTCL
B.லால்பகதூர் – NFTE
-------------------------------------------------------------------------------- 
 இராமநாதபுரம்
01/05/2018 – செவ்வாய்மாலை 05.00 மணி
தொலைபேசி நிலையம்இராமநாதபுரம்

பங்கேற்பு : தோழர்கள் 
S.முருகபூபதி – AITUC
C.இராமமூர்த்தி – AIBSNLPWA
S.இராஜா – NFTCL
V.மாரி – NFTE
-------------------------------------------------------------------------------- 
இராமேஸ்வரம்
01/05/2018 – செவ்வாய்மாலை 05.00 மணி
தொலைபேசி நிலையம்இராமேஸ்வரம்

பங்கேற்பு : தோழர்கள் 
S.முருகானந்தம் – AITUC
K.மலைராஜன் – AIBSNLPWA
B.இராஜன் – NFTCL
V.சேதுராஜன் – NFTE
-------------------------------------------------------------------------------- 
தோழர்களே
செங்கொடி ஏற்றுவோம்
உழைப்பாளர் திருநாளை
உணர்வோடு கொண்டாடுவோம்

Sunday, 29 April 2018


இராமநாதபுரம் வெள்ளி விழா மாநாடு

21/04/2018 அன்று இராமநாதபுரம் கிளையின்
வெள்ளிவிழா  மாநாடு தொலைபேசி நிலைய வளாகத்தில்
கிளைத்தலைவர் தோழர்.அமலநாதன்
அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

பணி நிறைவு பெற்ற தோழர்கள்.அமலநாதன்,
கோபிநாதன் ஆகியோருக்கு பணிநிறைவு விழா
தோழர்களின் வாழ்த்துரையோடு சீரோடு நடைபெற்றது.

செயல்பாட்டறிக்கை, நிதியறிக்கை, அமைப்புநிலை விவாதம்,
தேங்கியுள்ள பிரச்சினைகள்…. தீர்மானங்கள் என
கிளை மாநாடு சிறப்பாகச் செயல்பட்டது.

இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின்
இராமநாதபுரம் மாவட்டச்செயலரும்,
AITUCன் முன்னோடித்தலைவரும் வழக்கறிஞருமான
தோழர்.முருகபூபதி சிறப்புரையாற்றினார்.
NFTE மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான்
NFTCL மாவட்டச்செயலர் தோழர்.B.முருகன்
NFTCL மாவட்டத்தலைவர் தோழர்.C.முருகன்
AIBSNLPWA கிளைச்செயலர் தோழர்.இராமமூர்த்தி
AIBSNLEA மாவட்டத்தலைவர் தோழர்.தமிழ்மாறன்
NFTE காரைக்குடி கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியம்
NFTE இராமேஸ்வரம் கிளைச்செயலர் தோழர்.சேதுராஜன்
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
மூத்த தோழர்கள். காந்தி... ஜெயபாலன்...
மற்றும் பல தோழர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

கீழ்க்கண்ட நிர்வாகிகள் 
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : தோழர். R.இராமமூர்த்தி – JTO

செயலர் : தோழர். M. அரியமுத்து – JE
இணைச்செயலர் : தோழர்.K.அப்துல் மூமின் - OS 
பொருளர் : தோழர்.முருகேசன் – TT

நீண்ட பாரம்பரியமும் போர்க்குணமும் மிக்க
இராமநாதபுரம் கிளை சங்கச்செயல்பாட்டில்...
தொடர்ந்து முத்திரை பதிக்க நமது வாழ்த்துக்கள்…

பணி நிறைவு வாழ்த்துக்கள்

30/04/2018 காரைக்குடி மாவட்டத்தில்..
 பணி நிறைவு பெறும் அருமைத்தோழர்கள்
NFTE இயக்கத்தின் முன்னாள் படைவீரர்
பாசமிகுபண்புமிகுபணியில்கடமைமிகு
P.பாலுச்சாமி
SDE  பரமக்குடி 
---------------------------------------------------------------------------------

NFTE இயக்கத்தில் எந்நாளும் படைவீரர்
அமைதிமிகுஆன்மீகமிகுஇனிமைமிகுஈகைமிகு
M.சர்தார்
TT சிவகங்கை
ஆகிய அன்புத்தோழர்களின் பணி நிறைவுக்காலம்
வளமுடனும்நலமுடனும்சிறப்புடனும்
விளங்கிட மனதார வாழ்த்துகின்றோம்.

Thursday, 26 April 2018


TOWER  கணக்கு

31/03/2018 அன்று BSNL நிறுவனத்தில் உள்ள
 செல்கோபுரங்கள் எண்ணிக்கை 66707 ஆகும். 

வடக்குப்பகுதியில் 18001 கோபுரங்கள்.
 தெற்குப்பகுதியில் 20363 கோபுரங்கள். 
கிழக்குப்பகுதியில் 11585 கோபுரங்கள். 
மேற்குப்பகுதியில் 16758 கோபுரங்கள். 

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்
 அதிகபட்சமாக 5897 கோபுரங்கள் உள்ளன. 
தமிழகத்தில் 4821 கோபுரங்களும்...
சென்னையில் 1518 கோபுரங்களும் உள்ளன.

மேலே கண்ட 66707 கோபுரங்களில்...15268 கோபுரங்கள்
தனியார்கள்  பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. 
இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. 
கேரளாவில் அதிகபட்சமாக 1910 கோபுரங்கள்
 தனியார் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளன.
 தமிழகத்தில் 1309 கோபுரங்களும்.. 
சென்னையில் வெறும் 134 கோபுரங்களும்
 தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
 சென்ற நிதியாண்டில் மட்டும் 4780 கோபுரங்கள்
 தனியார் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 
15268 கோபுரங்களில் பாதிக்கும் மேற்பட்ட…
 அதாவது  7988 கோபுரங்கள் 
RJIL நிறுவனத்திற்கு மட்டும் விடப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக இராஜஸ்தான் மாநிலத்தில் 607 கோபுரங்களும்… 
தமிழகத்தில் 553 கோபுரங்களும்…
சென்னையில் வெறும் 53 கோபுரங்களும்
 RELIANCE நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

நமது செல்கோபுரங்களைப் பயன்படுத்தும் தனியார் நிறுவனங்களில் RJIL நிறுவனம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட கோபுரங்களைப் பயன்படுத்துகின்றது. இதிலிருந்தே BSNL நிறுவனத்தின் செல்கோபுரங்கள் மீது கண்ணாக இருப்பது யார் என்பது புரிய வரும். செல்கோபுரங்களைத் தனியாருக்கு வாடகைக்கு விடுவதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆண்டு தோறும் இலக்கு நிர்ணயிக்கப்படுகின்றது. இதில் கேரள மாநிலம் தன் இலக்கைத் தாண்டி கூடுதல் கோபுரங்களை வாடகைக்கு விட்டுள்ளது.  தமிழகத்தில் 69 சத இலக்கு மட்டுமே எட்டப்பட்டுள்ளது.

தற்போதுள்ள விதிமுறைகளின்படி… நடைமுறைகளின்படி… செல்கோபுரங்களைத் தனியாருக்கு வாடகைக்கு விடுவதில் பல்வேறு அலுவலக நடைமுறைச்சிக்கல்கள் உள்ளன. எனவே தாமதம் உண்டாகிறது. செல்கோபுரங்கள் BSNLன் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டால் மிக எளிதாக அவைகளை தனியாருக்கு வாடகைக்கு விட முடியும். குறிப்பாக RJIL நிறுவனத்திற்கு உடனடியாக TOWERகளைத் தாரை வார்க்க முடியும். தற்போது செல்கோபுரங்களை வாடகைக்கு விடுவதால் நமக்கு வருமானம் கிடைக்கின்றது. ஆனாலும் இதிலும் அரசியல் புகுத்தப்படும். வாடகைக்கு விடப்பட்டுள்ள 15268 கோபுரங்களில் ஜனவரி 2018 வரை 13190 கோபுரங்களுக்கு மட்டுமே வாடகைக்கான பில்கள் அனுப்பப்பட்டுள்ளன. முழுமையாக பில்கள் அனுப்பப்படவில்லை. 
வாடகைக்கு விடப்பட்ட கோபுரங்களுக்கான கட்டணம் முழுமையாக வருகின்றதா என்பதுவும் தெரியவில்லை.
  
மேலும் செல் கோபுரங்கள் தனி நிறுவனமாகப்  பிரிக்கப்பட்டு தனியாருக்கு வாடகைக்கு விடப்பட்டு… நாட்கள் நகர்ந்தவுடன் செல்கோபுரங்களுக்கு வாடகை செலுத்த வேண்டியதில்லை... எல்லோரும் எல்லா கோபுரங்களையும் சேர்ந்து அனுபவிக்கலாம் … கட்டணமில்லை என்று அரசு முடிவெடுக்கலாம். அத்தகைய நிலையில் தனியாருக்கு மிக மிக சாதகமாக அரசின் முடிவு அமையும்.

அரசு தவறு செய்யாது என்பது பிரிட்டிஷ் பழமொழி. 
ஆனால் இந்திய தேசத்தில்...
பல்வேறு தவறுகளைச் செய்துதான் ஒரு அரசு அமைகின்றது. 
அரசு மக்களுக்கான அரசு என்றால் நமக்கு சந்தேகம் எழாது. 
ஆனால் அரசு அம்பானிகளின் அரசு என்பதால்தான் 
நமக்கு எல்லாவற்றிலும் சந்தேகம் எழுகின்றது.

எனவே மக்கள் சொத்தைக் காப்பாற்ற...
களம் காண வேண்டியது நமது கடமையாகும்…
களம் காண்போம் தோழர்களே…

Wednesday, 25 April 2018


ஓய்வு பெற்றோர் மருத்துவப்படி

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மருத்துவப்படி
01/10/2017 முதல் 31/03/2018 வரையிலான
இரண்டு காலாண்டுகளுக்கு வழங்கப்படாமல் இருந்தது.  
மருத்துவப்படி வழங்கியதால் BSNLக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து வழங்கிட நிர்வாகம் தயக்கம் காட்டியது.

ஆனாலும் மூத்த தோழர்களின் கோரிக்கையைக் கணக்கில் கொண்டு 01/10/2017 முதல் 31/03/2018 வரையிலான காலத்திற்கு  மருத்துவப்படி வழங்கிட நிர்வாகம் 
இன்று 25/04/2018 உத்திரவிட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 2018-19ல் மருத்துவப்படி தொடருமா?
 என்பது பற்றி நிர்வாகம் விரைவில் தனது முடிவை 
அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய நிதி நெருக்கடியில்
மருத்துவப்படி மீண்டும் தொடராது என
நிர்வாகம் முடிவெடுக்கும் என்றே தோன்றுகிறது.

ஆனாலும்...நமது நிறுவனத்தில் ஊதாரித்தனமாக
பல கோடி ரூபாய்கள் வீணடிக்கப்படுகின்றன.
பல்லாண்டு உழைத்த தோழர்களுக்கு...
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு…
மூத்த குடிமக்களுக்கு தொடர்ந்து
மருத்துவப்படியை வழங்குவதே சரியானதாக இருக்கும்.

நிர்வாகம் என்ன செய்யப்போகின்றது
என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

Tuesday, 24 April 2018


தெருமுனைப் போராட்டம்

24/04/2018 அன்று BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
NFTE பொதுச்செயலர் தோழர். C.சிங் அவர்கள்
தலைமையில் டெல்லியில் கூடியது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

செல்கோபுரம் துணை நிறுவனம் எதிர்த்தும்…
மத்திய அரசின் BSNL விரோதக் கொள்கை எதிர்த்தும்…
07/05/2018 முதல் 11/05/2018 வரை ஐந்து நாட்கள்
நாடு தழுவிய தெருமுனைப் பரப்புரைகள்…

11/05/2018 அன்று
நாடு தழுவிய  கண்டன ஆர்ப்பாட்டங்கள்…
துணை நிறுவனம் நிறுத்தக்கோரி…
பிரதம மந்திரிக்கு தொலைஅச்சு கோரிக்கை மனு….

தோழர்களே…
நம் கண்ணின் மணியாம்
BSNL நிறுவனம் காத்திட…
ஒலிக்கட்டும் வீதியிலே குரல்..
ஒழியட்டும் விரோதச்செயல்…
களமிறங்குவோம்… காரியமாற்றுவோம்…

Monday, 23 April 2018


குறுஞ்செய்திகள்

01/04/2018 IDA உயர்விற்கான BSNL உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.

JE இலாக்காத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

BSNL ஊதாரிச்செலவினங்களைக் கட்டுப்படுத்த ஆலோசனைக்கூட்டம் 09/05/2018 அன்று டெல்லியில் நடைபெறுகிறது.

தற்காலிக ஓய்வூதியம் PROVISIONAL PENSION பெறுவோரின் 
ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

NFTE தமிழ்மாநிலச்செயற்குழு 14/05/2018 
அன்று கரூரில் நடைபெறுகிறது.

நட்டத்திலிருந்து விதிவிலக்குப் பெற மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவேண்டும் என DPE இலாக்கா 
DOTக்கு கடிதம் எழுதியுள்ளது.

மருத்துவத்திட்டத்தில் ரூ.3500/=க்கு மேல் அதிகமாக வருமானம் உள்ள குடும்ப உறுப்பினர்களை சேர்க்க இயலாது. இந்த உச்சவரம்பை உயர்த்திட நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 7வது ஊதியக்குழுவில் தற்போது குறைந்தபட்ச உச்சவரம்பு ரூ.9000/= 

மத்தியப்பிரதேசத்தில் BSNL நியமன அதிகாரிகளுக்கு 
புதிய ஆயுள் காப்பீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஊழியர்களையும் சேர்க்க வேண்டும் என 
நமது சங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளது.

பன்முகத்திறன் கொண்ட பதவிகளை உருவாக்கிட 
நமது சங்கம் கோரிக்கை எழுப்பியுள்ளது.

JE(TTA) இலாக்காத் தேர்வு முடிவுகள்

தேர்ச்சியும்... அதிர்ச்சியும்...

28/01/2018 அன்று நடைபெற்ற JE(TTA) இலாக்காத்தேர்வு முடிவுகள் இன்று 23/04/2018  CORPORATE அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்தியா முழுவதும் 9145 காலியிடங்கள் இருந்தன. 
ஆனால் நாடு முழுக்க 95 தோழர்கள் 
மட்டுமே தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 

தேர்வில் கண்டறியப்பட்ட பல குளறுபடிகளை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியும் பலன் ஏதுமில்லை. குளறுபடிகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட நிபுணர் குழு 100 கேள்விகளில் 9 கேள்விகளில் மட்டுமே பிழைகள் இருப்பதாக அறிவித்தது. தொழிற்சங்கங்களும், தனிநபர்களும் சுட்டிக்காட்டிய குளறுபடிகளில் 
உண்மையில்லை என்று நிர்வாகம் மறுதலித்துள்ளது.


மேலும்... வெற்றி பெற்ற தோழர்கள் அவர்களது பதவி 
எந்நேரமும் பறிக்கப்படலாம் என்பதை அறிந்திருப்பதாக 
நிர்வாகத்திற்கு UNDERTAKING தரவேண்டும். 

தமிழகத்தில் OC/OBC பிரிவில் 4 தோழர்களும்… 
SC பிரிவில் ஒரு தோழரும், 
ST பிரிவில் ஒரு தோழரும் வெற்றி பெற்றுள்ளனர். 
சென்னைத்தொலைபேசியில் ஒரேயொரு 
தோழர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளார்.

காரைக்குடி மாவட்டத்தில் தோழியர்.ஜூலி TT
தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 

வெற்றி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்
M.செல்வகுமார் - OC
விஜயகுமார் துரைசாமி -OBC
AS.குருபிரசாத் - OBC
S.ஜூலி - SC
D.சுரேஷ்குமார் - SC
P.சந்திரன் - ST

மொத்தக் காலியிடங்களில் சுமார் ஒரு சத ஊழியர்கள் மட்டுமே தங்கள் பதவி உயர்விற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். 
இது வருத்தத்தின் உச்சமாகும். அதிர்ச்சியின் அதிகபட்ச அளவாகும். 

அந்தமான், பீகார், ஜம்மு காஷ்மீர், ஒரிசா, கொல்கத்தா பகுதிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.  JE நேரடி நியமனத்தில் பல்வேறு  மாநிலங்களில் இருந்து தோழர்கள் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பணி புரிகின்றனர். ஆனால் அந்த மாநிலங்களில் இலாக்காத் தேர்வில் ஒருவர் கூட தேறவில்லை என்பது சிந்திக்க வைக்கிறது. 

JE பதவிகளில் இலாக்கா ஊழியர்களை ஓரங்கட்டி… 
வெளியாட்களை நியமனம் செய்வதற்கான
 மறைமுக ஏற்பாடாகவே நமது இலாக்காத் தேர்வுகளும்… 
அதன் முடிவுகளும் இருப்பதாக நமக்குப் புலப்படுகின்றது.

Tuesday, 17 April 2018


கிளை மாநாடு

NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
இராமநாதபுரம்

 கிளை மாநாடு
பணி நிறைவு பாராட்டு விழா

21/04/2018 – சனிக்கிழமை - மாலை 05.00 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

-: தலைமை :-
தோழர்.அமலநாதன் – கிளைத்தலைவர்

செயல்பாட்டறிக்கை – நிதியறிக்கை – தீர்மானங்கள் –
அமைப்புநிலை - புதிய நிர்வாகிகள் தேர்வு – இன்ன பிற

பணி நிறைவு பாராட்டு 
தோழர். R. அமலநாதன்
கிளைத்தலைவர்


தோழர். C.கோபிநாதன் 
கிளைப்பொருளர்


சிறப்புரை
வழக்கறிஞர் தோழர். முருகபூபதி - AITUC

 தோழர் G.சுபேதார் அலிகான்
NFTE மாநில அமைப்புச்செயலர்
   
பங்கேற்பு : தோழர்கள்
 S.முருகன்
NFTCL மாவட்டத்தலைவர்

B.லால்பகதூர்
NFTE மாவட்டத்தலைவர்

K.தமிழ்மாறன்
AIBSNLEA மாவட்டத்தலைவர்

B.முருகன்
NFTCL மாவட்டச்செயலர்

V.மாரி
NFTE மாவட்டச்செயலர்

C. இராமமூர்த்தி
AIBSNLPWA கிளைச்செயலர் - இராமநாதபுரம்

K.சேதுராஜா
NFTE கிளைச்செயலர் – இராமேஸ்வரம்

A.தமிழரசன்
NFTE கிளைச்செயலர் – பரமக்குடி

K.நாராயணமூர்த்தி
NFTE கிளைச்செயலர் – மானாமதுரை

T.அல்போன்ஸ்
NFTE கிளைச்செயலர் – திருப்பத்தூர்

I.சேவியர்
NFTE கிளைச்செயலர் பொறுப்பு – தேவகோட்டை

M.ஆரோக்கியதாஸ்
NFTE கிளைச்செயலர் – காரைக்குடி

நன்றியுரை
தோழர்.அரியமுத்து
NFTE மாவட்ட உதவித்தலைவர்

தோழர்களே.. வாரீர்…
அன்புடன் அழைக்கும்…
G.தங்கராஜ் - கிளைச்செயலர்

Friday, 13 April 2018


ஏப்ரல் 14
அண்ணல் அம்பேத்கார்
பிறந்த நாள்
 
பிறப்பு சிறப்பல்ல… 
உழைப்பே சிறப்பு…

அண்ணல் அம்பேத்கார் 
புகழ் பாடுவோம்