ஏப்ரல் 13
பட்டுக்கோட்டை பிறந்த நாள்
பாட்டாளிகளின் பட்டுக்கோட்டை |
காடு விளைஞ்சென்ன…
கையும்
காலும்தானே மிச்சமென்று
கவிபாடிய
பட்டுக்கோட்டையே…
இன்று
காடும்
விளையவில்லை..
கழனியிலும்
ஈரமில்லை…
தேகம் குளிரவில்லை…
தேசம் வளரவில்லை…
சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க…
என்ன பண்ணிக் கிழிச்சீங்க?..
சிந்தனையில் ஞானிகளும்
புத்தரோடு ஏசுவும்
உத்தமர் காந்தியும்
எத்தனையோ உண்மைகளை
எழுதி எழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க…
என்ன பண்ணிக் கிழிச்சீங்க?..
என்று கேள்வி எழுப்பிய பட்டுக்கோட்டையே…
இன்று…
படித்தவன்
பாவம் செய்கின்றான்…
ஆள்பவன்
அநீதி செய்கின்றான்…
வலுத்தவன்
வாழ்கிறான்…
இளைத்தவன்
வீழ்கிறான்…
காலத்தால்
அழியாத
கருத்துப்
பெட்டகம்…
கவிஞர்
பட்டுக்கோட்டை புகழ் ஓங்குக…
No comments:
Post a Comment