மக்களின்
தலைவர்…
டிசம்பர்
– 24
மக்கள் திலகம் எம்ஜியார்
நினைவு நாள்
எம்ஜியார்
தமிழக முதல்வராக இருந்தபோது...
மதிய
உணவுத்திட்டம் என்ற பெயரால்
மக்கள்
வரிப்பணத்தை வீணாக்கலாமா?
என்ற
கேள்வி எழுப்பப்பட்டது….
அதற்கு
எம்ஜியார் அவர்களே மனம் உருகி சொன்ன பதில்…
“நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.
பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு?
பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத்
தொழில் முறை நடிகர்களை வைத்து
நாடகம் போடும் நிறுவனங்கள்.
அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள்.
வறுமையின் காரணமாகவும்,
கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள்.
எல்லோரும் ஒன்றாகத் தங்கி… ஒன்றாக உண்டு,
ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள்.
சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்.
வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது.
ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப்
பழி தீர்த்துக் கொள்வதும் அப்போதுதான்.
வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும்...
ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்ந்திருக்கோம்.
நல்ல பசி… இலை போட்டாச்சு.
காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க.
சோறு வந்துகிட்டே இருக்கு…
என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர்
நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு.
வேகமாக என்கிட்ட வந்தாரு.
' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதல் பந்தி கேட்குதானு?...
கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார்.
கையில
சோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில
எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்?
ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட
அவமானம்தான் அதிகமாக இருந்தது.
அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது,
கேள்வி கேட்க முடியாது...
தன் கிட்ட அதிகாரம் இருக்குனுதானே எழுப்பிவிடறாரு?
எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா
நான்
நாலு பேருக்குச் சோறு போடுவேன்…
எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்னு
அன்றைக்கு நினைச்சேன்...
இன்னிக்கு எல்லோரும் என்னை
வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது
எனக்கு அவங்களுக்கு சோறு போடற
கடமை இருக்கிற நினைப்பு வருது.
அடுத்த வேளைச் சோற்றுக்கு
உத்திரவாதம் இருக்கிறவங்க...
ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன
வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்.
எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை….
அவரது
அனுபவ விளக்கம்....
எந்தப்பொருளாதாரத்
தத்துவங்களாலும் விளக்க முடியாதது….
ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள்
படிப்பைப்
பாதியில் நிறுத்தி
விட்டு விலகும் விகிதம் (DROP OUT)
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு.
NUEPA - The National
University of Educational Planning and Administration
என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த அறிக்கையின்படி
தமிழகத்தில்
நூறுசத மாணவர்கள்
தங்கள்
ஆரம்பக்கல்வியை படித்து முடிக்கின்றார்கள்.
அதற்கு
காரணம் தமிழகத்தில் உள்ள சத்துணவுத்திட்டம்.
சத்துணவுத்திட்டம்
என்றாலே
பெருந்தலைவர்
காமராஜரும்…
மக்கள்
திலகம் எம்ஜியாருமே
மக்கள்
மனங்களில் நிற்பார்கள்…
மக்களுக்கு
மயிலிறகாக வாழ்ந்து மறைந்த
மக்கள்
திலகம் நினைவைப் போற்றுவோம்….
No comments:
Post a Comment