Friday, 21 December 2018


வானம் வருத்தப்படும்…

பிரபஞ்சன்…
மனிதர்களை அலசினார்…
மகாபாரதத்தையும் அலசினார்…
மனிதநேயத்தோடு மக்களை அலசினார்…
எழுத்துக்களால் எளியவர்களை அலசினார்…

வரலாற்றை எளிய வார்த்தைகளாக்கினார்…
வார்த்தைகளைப் பெரும் வரலாறாக்கினார்…

வானம் வசப்படும் நாவலால்…
சாமானிய மக்களை வசப்படுத்தினார்…
சாகித்ய அகாடமி விருதையும் வசப்படுத்தினார்…

பிரபஞ்சன் மறைவிற்கு…
பூவுலகு புலம்பி நிற்கிறது…
வானம் வருத்தப்படுகிறது…
பிரபஞ்சமே பெருமூச்சுவிடுகிறது…

No comments:

Post a Comment