01/06/2019
முதல் தமிழகத்தில்
வணிகப்பகுதி BUSINESS AREA நடைமுறை அமுலாக்கப்பட்டுள்ளதாக தமிழ்
மாநில நிர்வாகம் இன்று 01/06/2019 உத்திரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 11 வணிகப்பகுதிகள் செயல்படும்.
மேற்கண்ட
உத்திரவின்படி...
ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட
மனிதவளம் HR பணிகள்...
FINANCE நிதிப்பிரிவு பணிகள்...
PLANNING திட்டப்பகுதி பணிகள்,
மற்றும் கொள்முதல் பணிகள் ஆகியவை வணிகப்பகுதியால் மேற்கொள்ளப்படும்.
வணிகப்பகுதி
பொதுமேலாளர்கள் வணிகப்பெருக்கம், வருமான உயர்வு மற்றும் லாபமீட்டுதல் ஆகியவற்றிற்கு
பொறுப்பாவார்கள்.
இணைக்கப்பட்ட
மொத்தப்பகுதியின்
SALES விற்பனைப்பணி,
MARKETING சந்தைப்படுத்தும் பணி,
CUSTOMER
SERVICES வாடிக்கையாளர் சேவை, NETWORK EXPANSION தொலைத்தொடர்பு வலைப்பின்னல் பெருக்கம்,
பராமரிப்பு உள்ளிட்ட அனைத்துப்பணிகளும்...
வணிகப்பகுதி தலைமையகத்தால் மேற்கொள்ளப்படும்.
வணிகப்பகுதிகள்
உருவாக்கப்பட்டாலும்
SSA CADRE எனப்படும் ஊழியர்கள் மட்டத்தில் மாற்றல் எதுவும் இருக்காது.
தற்போதைய இடங்களிலேயே தொடருவார்கள்.
உபரியாக உள்ள
ஊழியர்கள் விற்பனைப்பிரிவு, வாடிக்கையாளர் சேவை மற்றும் சேவைத்தரத்தை உயர்த்துதல் போன்ற
பணிகளில் பயன்படுத்தப்படுவார்கள்.
2015ல் திட்டமிடப்பட்ட..
BUSINESS AREA என்னும் வணிகப்பகுதி உருவாக்கம்
தமிழகத்தில் தற்போதுதான் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பல சாதகங்கள் உள்ளன. பாதகங்களும் உள்ளன.
தற்போது BSNL
உள்ள நிலையில்...
எதிர்மறையான எண்ணங்களையும்...
செயல்பாடுகளையும்... சற்றே ஒரங்கட்டி...
மாற்றங்களை
எதிர்கொண்டு
BSNL நிறுவனம் நிலைத்திட... தழைத்திட...
நமது பங்கை செலுத்துவோம்.
Super
ReplyDelete