58 என்னும் அணுகுண்டு...
இதோ...
58வது முறையாக வெடித்து
விட்டது...
58 வயது என்னும் அணுகுண்டு...
இது
அனுதினமும் வெடிக்கும்
குண்டு...
அணுஅணுவாய் ஊழியரை வதைக்கும்
குண்டு...
மெய்ப்பொருள் காண்பதறிவு
என்றார் வள்ளுவர்...
அதை இரண்டு குறட்களில்
அழுத்தமாகக் கூறியுள்ளார்...
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு...
மெய்ப்பொருள் காண்ப தறிவு...
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு...
மெய்ப்பொருள் காண்ப தறிவு...
மெய்ப்பொருள் காண்பதறிவு
என்ற ஈற்றடி...
இரண்டு குறள்களில் வருவதிலிருந்தே...
வள்ளுவர் மெய்ப்பொருள்
காண்பதில் எத்தகைய
அழுத்தம் கொடுத்துள்ளார்
என்பது தெளிவாகும்...
DOT ஊழியர்கள்
BSNLலில் நிரந்தரப்படுத்தப்பட்டபோது
அளிக்கப்பட்ட
PRESIDENTIAL உத்திரவில்...
Sanction
of the President is hereby conveyed to the permanent absorption of
Sri. A. RUMOUR in BSNL under the terms and conditions as
indicated below:
3.
Pension/Gratuity : Shri. A. RUMOUR shall be eligible for pensionary benefits
including gratuity as per the provisions of Rule 37-A of the CCS(Pension) Rules
as amended from time to time என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
DOTயில் இருந்து
BSNL நிறுவனத்திற்கு நிரந்தரப்படுத்தப்பட்டவர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை போன்றவை
ஓய்வூதிய விதிகள் 37-Aன்படி வரன்முறைப்படுத்தப்படும்.
தற்போதைய
ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வு வயது 60 ஆகும்.
இதில் ஏதேனும்
மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பின்
ஓய்வூதிய
விதிகள் மீண்டும் திருத்தப்பட வேண்டும்.
CDA ஓய்வூதியர்களுக்கு
60 வயது... IDA ஓய்வூதியர்களுக்கு 58 வயது...
என மாற்றம்
செய்ய இயலாது. அதற்கு சட்டவிதிகளைத் திருத்த வேண்டும். மேலும் இது ஓய்வு பெறும் ஊழியரிடையே
DISCRIMINATION எனப்படும் பாரபட்சத்தை உருவாக்கும்.
இது நமது அடிப்படை அரசியல் உரிமைக்கு எதிரானது. எனவே இதன் தொடர்பாக எந்த சட்டவிதிகள்
திருத்தப்பட்டாலும் அது சட்டத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது.
தற்போதுதான்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தமிழ் வாழ்க...
மார்க்சியம் வாழ்க... என்று உறுதிமொழி எடுத்து பதவியேற்றுள்ளார்கள். குடியரசுத்தலைவர்
உரை 20/06/2019 அன்று நடந்தேறியுள்ளது. இதனிடையே அமைச்சரவை கூடிவிட்டது...
BSNL ஊழியர்களின்
ஓய்வு வயது 01/11/2019 முதல்
58 ஆகக்குறைக்கப்படுகின்றது என நாடுமுழுவதும்
கடுமையான
வேகத்தில் வதந்தி பரவிக்கொண்டிருக்கின்றது.
இது தொடர்பாக...
நமது மத்திய சங்கம் பலமுறை உரிய மட்டங்களுக்கு கடிதம் எழுதி இது முறையற்றது என தெளிவுபடுத்தியுள்ளது.
இன்றும் மத்திய சங்கம் தனது வலைதளத்தில் இது போன்ற
வதந்திகளை நம்பவேண்டாம் எனகேட்டுக்கொண்டுள்ளது.
BSNLEU சங்கமும் வதந்திகளை நம்பவேண்டாம்
என வேண்டுகோள் விடுத்துள்ளது.
தோழர்களே...
BSNL கடும்
நிதிநெருக்கடியில் உள்ளது.
ஓய்வு பெறும்
வயதை 58 ஆகக்குறைப்பதால்
அதனுடைய நிதிநெருக்கடி
குறைந்துவிடப்போவதில்லை.
மாறாக விசுவாசமிக்க
ஊழியர்களைத்தான் BSNL இழக்கும்.
AUAB அனைத்து
சங்க கூட்டமைப்பின் சார்பாக இலாக்கா அமைச்சரை சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமைச்சருடனான பேச்சுவார்த்தைக்குப் பின்பு அரசின் நிலைபாடு என்ன என்பது புரியும்.
அரசு ஊழியர்
விரோத முடிவுகளை அமுல்படுத்த தயாரானால்..
அதை எதிர்த்துப்
போராட நாம் உறுதியுடன் தயாராவோம்...
அதுவரை பொறுத்திருப்போம்...
வதந்திகளைப்
புறம் தள்ளுவோம்...
No comments:
Post a Comment