அனைத்து சங்க
கூட்ட முடிவுகள்
19/06/2019
அன்று டெல்லியில் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் AUAB அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
BSNL நிறுவனத்தின்
நிதிநிலை மிகவும் கவலையுடன் பரிசீலிக்கப்பட்டது.
மின்சாரக்கட்டணம்
செலுத்தாமை, ஒப்பந்தகாரர்களுக்கு பில்கள் தேக்கம், ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காமை ஆகிய காரணங்களால் நமது சேவை பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலை ஆழமாக விவாதிக்கப்பட்டது.
நிர்வாகம்
CAPEX என்னும் முதலீட்டு செலவினங்களுக்குத் தடை விதித்துள்ளது. இதனால் சேவை முடக்கம்
ஏற்பட்டுள்ளது.
மாதந்தோறும்
ஊழியர் செலவுகளுக்காக ரூ.1300 கோடியும்
இதர செலவினங்களுக்காக ரூ. 900 கோடியும்...
ஆக மொத்தம் ரூ.2200/= கோடி மாதந்தோறும் தேவைப்படுகின்றது.
ஆனால் மாதாந்திர வருமானம் ரூ.1200 கோடி மட்டுமே வருவதால் கூடுதல் செலவினங்களைச் சமாளிக்க
இயலாமல்
BSNL நிறுவனம் தடுமாறுகின்றது.
எனவே அனைத்து
சங்க கூட்டமைப்பு சார்பில் நிறுவனத்தின் நிலை பற்றி இலாக்கா அமைச்சருக்கு விரிவான முறையில்
கடிதம் எழுதி நிறுவனத்தின் நிதிமேம்பாட்டிற்கு அரசை உதவிடக்கோருவது...
CAPEX என்னும்
முதலீட்டு செலவினங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே நீக்குமாறு நிர்வாகத்திற்கு கடிதம்
எழுதுவது...
ஊழியர் அதிகாரிகள்
கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தொகுத்து இலாக்கா அமைச்சருக்கு
கோரிக்கை
மனு அளிப்பது...
CMD அவர்களை
சந்தித்து ஒரு சில சங்கத்தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
FR 17 சேவை முறிவு உத்திரவை
திரும்பப் பெற வலியுறுத்துவது...
தோழர்களே...
தற்போதுள்ள
சூழலில் கோரிக்கை மனு அளிப்பது, மந்திரியை சந்திப்பது, அதிகாரிகளிடம் முறையிடுவது என்பது
மட்டுமே தொழிற்சங்க நடவடிக்கைகளாக மாறிவிட்டன.
வேறு வழிகள் புலப்படவில்லை என்பதே இன்றைய
நிலை...
No comments:
Post a Comment