Tuesday, 13 August 2019

மதுரையில் ரவுடித்தனம்

10/08/2019 அன்று 
மதுரை தல்லாகுளம் ஊழியர் குடியிருப்பில் 
பணிசெய்து கொண்டிருந்த தோழர்.சந்திரசேகர் TT 
அங்கு வசித்து வரும் திரு.கார்த்திகேயன் SDE என்பவரால்
கடுமையாகத் தாக்கப்பட்டு காயமுற்றார். 

காயமுற்ற தோழர்.சந்திரசேகர் TT  
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் 
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தோழர்.சந்திரசேகரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய
திரு.கார்த்திகேயன் SDE திருநெல்வேலியில் 
பேட்டரி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதுவும், 
தர்மபுரியில் தோழர்களுடன் வீண்சண்டையும் வம்பும் செய்து
அங்கிருந்து ம்துரைக்கு தூக்கியடிக்கப்பட்டவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

மனிதநேயமற்ற திரு.கார்த்திகேயன் SDEன் காட்டுமிராண்டித்தன நடவடிக்கையைக் கண்டித்தும் தவறிழைத்த திரு.கார்த்திகேயன் SDE மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் 
13/08/2019 அன்று AUAB அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் 
மதுரை முதன்மைப்பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 
AUAB தலைவர் தோழர்.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், 
CONVENOR தோழர்.செல்வின் சத்தியராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 
அனைத்து சங்கத்தலைவர்களும் கண்டன உரையாற்றினார்கள். 
முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன….

 தீர்மானங்கள்
10/08/2019 அன்று பணியில் இருந்த திரு.சந்திரசேகர் TT அவர்களை கடுமையாகத்தாக்கி காயமுறச்செய்த திரு.கார்த்திகேயன் SDE 
உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.  
மேற்கொண்டு இலாக்கா நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 -------------------------------------------------
தல்லாகுளம் ஊழியர் குடியிருப்பில் அமைதியைக் குலைத்து வரும் 
திரு.கார்த்திகேயன் SDEஐ ஊழியர் குடியிருப்பில் இருந்து அகற்ற வேண்டும்.
 
 -------------------------------------------------
எல்லோரையும் மிரட்டுவது, மட்டு மரியாதை இல்லாமல் பேசுவது, 
தனது உடல் பலத்தைக் காட்டி இளைத்தவர்களைத் துன்புறுத்துவது என்று 
மதுரைப்பகுதியில் தொழில் அமைதியைக் குலைத்து ரவுடித்தனம் செய்து வரும் 
திரு. திரு.கார்த்திகேயன் SDE உடனடியாக 
மதுரையை விட்டு மாற்றல் செய்யப்படவேண்டும்.

தோழர்களே….
குடியிருப்பு என்பது ஒரு சமத்துவபுரம். 
அங்கு எல்லா மதத்தினரும் உண்டு. 
எல்லா சாதியினரும் உண்டு. 
எல்லாக் கேடர்களும் உண்டு. 
எல்லா மொழியினரும் உண்டு...
எல்லா ஊர்க்காரர்களும் உண்டு. 
அது ஓர் சமத்துவபுரம். 
அத்தகையை சமத்துவம் நிலவும் இடத்தில் 
தேவையற்ற முறையில் அமைதியைக் குலைத்து 
சாதிமத பேதம் வளர்த்து 
ஊழியர்களைத்துன்புறுத்தி இன்பம் காணும் 
கார்த்திகேயன் போன்ற சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பவர்கள் மீது 
நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

ஒற்றுமையும் அமைதியும் நிலவும் 
மதுரை மாவட்டத்தில் ஒருசில நபர்களால் 
அமைதி கெடுவது எவ்வகையிலும் அனுமதிக்க முடியாதது.

No comments:

Post a Comment