வானகம் சென்ற
வாக்குறுதிகள்…
வட்டியைக்
குறைப்போம் என்றார்கள்…
கந்து வட்டியை
விட
கடுமையான
வட்டியை வசூலித்தார்கள்…
சேமநல நிதிக்கான
வட்டியை அதிகரிப்போம்
என்றார்கள்…
ஈவுப்பணத்தைக்
கூட (DIVIDEND)
ஈவிரக்கம்
இல்லாமல் கிடப்பில் போட்டார்கள்…
ஊழலை ஒழிப்போம்
என்றார்கள்..
ஊழலின் ஒட்டுமொத்த
அடையாளமாகிப்போனார்கள்…
ஊதாரித்தனத்தை
அழிப்போம் என்றார்கள்..
ஊதாரித்தனத்தின்
உலக மகாக்குத்தகைக்காரர்கள்
ஆனார்கள்…
சகாயவிலையில்
அடுக்குமாடி குடியிருப்பு என்றார்கள்…
சல்லாபத்திற்கு
அடையாள வீடு கட்டிக்கொண்டார்கள்…
ஒரு சங்க
ஆதிக்கம் தடுப்போம் என்றார்கள்…
NFTEசங்கத்தையே ஆதிக்கசங்கமாக
ஆக்கிவிட்டார்கள்…
ஒரு கட்சி
ஆதிக்கத்தை முறிப்போம் என்றார்கள்…
கடைசியில்
கட்சியையே முறித்து விட்டார்கள்…
நடுநிலையான
நல்ல நிர்வாகம்
அமைப்போம் என்றார்கள்….
கடன் கொடுக்க
வக்கற்றுப்போனார்கள்…
இறந்தவன்
குடும்பத்தை தெருவில் நிறுத்தினார்கள்…
ஓய்வுபெற்றோரை
ஒழித்துக்கட்டினார்கள்…
கணக்கு முடித்தோரின்
கணக்கைத் தடுத்தார்கள்…
சிவன்சொத்தை
விற்றுத் தம் சொத்தாக்கினார்கள்…
இந்த இழிநிலை
இன்னும் தொடரவேண்டுமா?
ஆயிரமாயிரம்
உறுப்பினர்களின்
உதிரத்தில்….
வியர்வையில்…
உருவான கூட்டுறவு
சங்கம்…
கொள்ளை போவதோ?
குலைந்து
போவதோ?
சங்கத்தின்
பெயரால்
சதிகளை சகிப்போமோ?
தோழர்களே…
பொறுத்தது
போதும்… பொங்கி எழுவீர்…
வெள்ளையனே
வெளியேறு
என மகாத்மா
முழங்கிய
ஆகஸ்ட் 9ல்…
சென்னக்கூட்டுறவு
சங்க
மதுரைக்கிளையின்
முன்…
மதுரை எல்லீஸ் நகரில்
ஆர்ப்பரிப்பீர்… அணி திரள்வீர்…
No comments:
Post a Comment