ஒன்றுபட்ட போராட்டம்
நவம்பர் 26 நாடு தழுவிய
பொதுவேலை
நிறுத்தத்தில்
BSNL ஊழியர் சங்கங்கள் பங்கேற்பு...
பொது வேலை நிறுத்தம் செய்வோம்...
போராடிப்பெற்ற உரிமைகள் காப்போம்...
நிர்வாகத்துடன் சந்திப்பு
NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் மற்றும் பொருளர்
தோழர்.ராஜ்மவுலி ஆகியோர் இன்று 10/11/2020 DIRECTOR (HR) மனித வள இயக்குநரைச் சந்தித்து
இலாக்கா வளர்ச்சி மற்றும் ஊழியர் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். கீழ்க்கண்ட
பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
-------------------------------------------
JTO, JE மற்றும்
TT கேடர்களுக்கு விரைவில் இலாக்காத் தேர்வு நடத்திட கோரிக்கை எழுப்பப்பட்டது. விருப்ப
ஓய்விற்குப்பின் உள்ள காலியிடங்களுக்கு BSNL வாரியத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில்
தேர்வு அறிவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------
டெலிகாம் டெக்னீசியனுக்கு இணையான MTS கேடர் உருவாக்கிட கோரிக்கை வைக்கப்பட்டது. உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு
புதிய கேடர் உருவாக்கம்
பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது.
-------------------------------------------
கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு
அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. சாதகமான முடிவு எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------
விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்கள் தொடர்ந்து குடியிருப்புக்களில்
வசித்திட அனுமதி அளித்திடவும், குடியிருப்பு வாடகை மிக அதிகமாக உயர்த்தப்பட்டதால் ஊழியர்களுக்கு
மிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். வாடகை உயர்வைப் பற்றி
மறுபரிசீலனை செய்வதாக மனிதவள இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.
-------------------------------------------
குஜராத் மாநிலத்தின் தலைமை அதிகாரி NFTE சங்கத் தலைவர்களைச் சந்திப்பதில்லை என்ற தவறான செயல் சுட்டிக்காட்டப்பட்டது. அவர் தற்போது விடுப்பில் இருப்பதாலும், அவர் பணிக்குத் திரும்பியபின் உடனடியாக சந்திப்பு நடைபெறும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26 பொதுவேலை நிறுத்தம்
BSNL கோரிக்கைகள்
4G சேவை உடனே வழங்கு...
01/01/2017 முதல் 3வது ஊதிய
திருத்தம் அமுல்படுத்து...
ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக
சம்பளம் வழங்கு...
ஒப்பந்த ஊழியர்களைப் பணியை
விட்டு நீக்காதே...
01/01/2017 முதல் ஓய்வூதிய
மாற்றம் அமுல்படுத்து...
ஊழியர்களுக்கு புதிய பதவி
உயர்வுக் கொள்கை அமுல்படுத்து...
இலாக்காத் தேர்வுகளை உடனடியாக
நடத்து...
கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களுக்கு
நிவாரணம் வழங்கு...
அதிகாரிகளைப் போல் ஊழியர்களுக்கு
GROUP TERM INSURANCE காப்பீடு வழங்கு....
BSNL நேரடி ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப் பலன்களை அமுல்படுத்து...
தற்காலிக ஊழியர் CASUAL
LABOUR கூலி உயர்வை அமுல்படுத்து...
செய்திகள்
அக்டோபர் சம்பளம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதச்சம்பளத்தை உடனடியாக வழங்கிடக்கோரி மத்திய சங்கம் இயக்குநர் நிதியிடம் கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் அக்டோபர் மாதச்சம்பளம் நவம்பர் 10க்குள் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் போனஸ் கேட்டது அந்தக்காலம். சம்பளத்தையாவது கொடுங்கள் என்பது இந்தக்காலம். கொடுங்காலம்.
-----------------------------------------------
இலாக்காத் தேர்வுகள்
மிக நீண்ட நாட்களாக இலாக்காத் தேர்வுகள்
நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. விருப்ப
ஓய்வுக்குப்பின் BSNLலில் எல்லாப் பதவிகளும்
காலியாகிவிட்டன. எனவே ATT பதவியில் இருந்து TT
என்னும் போன்மெக்கானிக், TT பதவியில் இருந்து
TTA என்னும் JE பதவி, JE பதவியில் இருந்து JTO
மற்றும் JAO பதவிகளில் இலாக்கா காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே உடனடியாக இலாக்காத் தேர்வுகளை நடத்தக்கோரி மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. விரைவில் இலாக்காத் தேர்வுகள் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தகுதியுள்ள தோழர்கள் தயாராகவும்.
-----------------------------------------------
FTTH இணைப்புக்கள்
BHARAT FIBRE என்னும் FTTH இணைப்புக்களுக்கு
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால்
கேபிள் போன்ற பொருட்கள் இல்லாததாலும், குத்தகைக்காரர்களின் நியாயமற்ற அணுகுமுறையாலும் இணைப்புக்கள் கொடுப்பதில் மிகுந்த தாமதம் நிலவுகின்றது. குத்தகைக்காரர்களை மட்டுமே நம்பி இராமல் இணைப்புக்கள் கொடுப்பதில் BSNL முனைப்பு காட்டிடக்கோரி NFTE அகில இந்தியத் தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது அவர்கள் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
-----------------------------------------------
வைப்பு நிதி வட்டிக்குறைப்பு
7.9 சதமாக இருந்த GPF வைப்புநிதி வட்டி ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரையிலான 6 மாத காலத்திற்கு 7.1 சதமாக குறைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் அக்டோபர் 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலத்திற்கும் 7.1 சத வட்டியே தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. சேமிப்பை ஊக்கப்படுத்துவதற்காக 2000ம் ஆண்டு 12 சத வட்டி வழங்கப்பட்டது. கழுதை தேய்ந்த கதையாக தற்போது வட்டி 7.1 சதத்திற்கு வந்து விட்டது.
-----------------------------------------------
EX GRATIA நான்காவது பட்டுவாடா
விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு அருட்கொடை எனப்படும் EX GRATIA கடைசிக்கட்டப் பட்டுவாடா செய்வதில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது. பல தோழர்களின் அடிப்படைச்சம்பளம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் முரண்பாடு நிலவுவதாலும், அவை சரிசெய்யப்படாததாலும் தேக்க நிலை நிலவுகிறது.
பொதுவேலை நிறுத்தம்
விவசாயிகள்
விரோத...
தொழிலாளர்
விரோத...
மக்கள் விரோத...
மத்திய அரசைக்
கண்டித்து
நவம்பர்...
26
நாடு தழுவிய
பொதுவேலை நிறுத்தம்...
------------------------------------------
மத்திய அரசே...
வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும், மாதம் ரூ.7500/= வீதம் நிவாரணத் தொகை வழங்கு...
ஒரு நபருக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ அரிசி... கோதுமை வழங்கு...
குறைந்தபட்சக்கூலி நாளொன்றுக்கு ரூ.600/=வழங்கு....
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில்
ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கு...
அந்த திட்டத்தை
நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்...
வங்கி, காப்பீடு, BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்துவதை நிறுத்து...
ரயில்வே , பாதுகாப்புத்துறை தொழிற் சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட்டாக மாற்றுவதைக் கைவிடு...
அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் ஓய்வு வயது மூப்படையும் முன்பாகவே, கட்டாய ஓய்வு தருவதற்கான கொடூரமான அரசு நிர்வாக சுற்றறிக்கையை திரும்பப் பெறு...
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்...
பழைய ஓய்வூதிய திட்டப்படி அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு....
EPF உடன் இணைந்த EPS-95 ஓய்வூதியத்தை அதிகரித்து மேம்படுத்து...
--------------------------------------------------------
தோழர்களே...
தொழிலாளர்
விரோத.... விவசாயிகள் விரோத...
மக்கள் விரோத...
ஜனநாயக விரோத...
மனிதநேய விரோத
மத்திய அரசைக்கண்டித்து...
அணிதிரள்வோம்...
களம் காண்போம்...
ஒப்பந்த ஊழியர் சம்பளம் முதல் தவணை
இன்று 05/11/2020 ஒப்பந்த ஊழியர் சம்பளம் பற்றிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
31/10/2020க்குள் 25 சத சம்பளம் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்திரவின் அடிப்படையில் 15 கோடி ரூபாய் அதற்காக உருவாக்கப்பட்ட புதிய வங்கிக்கணக்கில் நிர்வாகத்தால் செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே மேற்கண்ட சம்பளப்பணத்தை தங்களுடைய கணக்கில் செலுத்த வேண்டும் என ஒப்பந்தகாரர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த காலங்களில் ஒப்பந்தகாரர்களின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு அது யானை வாயில் போன கரும்பாக ஆன கதை நமக்குத் தெரிந்ததுதான். எனவேதான் நீதிமன்றம் தொழிலாளர் ஆணையரிடம் சம்பளத்தைப் பட்டுவாடா செய்யும் பணியை ஒப்படைத்தது.
மாவட்ட நிர்வாகங்கள் ஏற்கனவே வேலைசெய்யும் ஒப்பந்த ஊழியர்களின் வங்கிக்கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை மாநில நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளன.
எனவே சம்பளத்தை தொழிலாளர் ஆணையர் சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது.
இருப்பினும் இன்றைய விசாரணையில் நீதிமன்றத்தின் நடவடிக்கையைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் நடைபெறும்.
எப்படியாயினும் தீபாவளிக்கு முன்பாக ஒப்பந்த
ஊழியர்களுக்கு குறைந்தது இரண்டு மாத சம்பளங்கள் முதல் தவணையாகப்பட்டுவாடா செய்யப்படும்
என்பதில் ஐயமில்லை.