Wednesday, 4 November 2020

 ஒப்பந்த ஊழியர் சம்பளம் முதல் தவணை

இன்று 05/11/2020 ஒப்பந்த ஊழியர் சம்பளம் பற்றிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

31/10/2020க்குள் 25 சத சம்பளம் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்திரவின் அடிப்படையில் 15 கோடி ரூபாய் அதற்காக உருவாக்கப்பட்ட புதிய வங்கிக்கணக்கில் நிர்வாகத்தால் செலுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே மேற்கண்ட சம்பளப்பணத்தை தங்களுடைய கணக்கில் செலுத்த வேண்டும் என ஒப்பந்தகாரர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது. 

கடந்த காலங்களில் ஒப்பந்தகாரர்களின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு அது யானை வாயில் போன கரும்பாக ஆன கதை நமக்குத் தெரிந்ததுதான்.  எனவேதான் நீதிமன்றம் தொழிலாளர் ஆணையரிடம் சம்பளத்தைப் பட்டுவாடா செய்யும் பணியை ஒப்படைத்தது. 

மாவட்ட நிர்வாகங்கள் ஏற்கனவே வேலைசெய்யும் ஒப்பந்த ஊழியர்களின் வங்கிக்கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை மாநில நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளன. 

எனவே சம்பளத்தை தொழிலாளர் ஆணையர் சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது. 

இருப்பினும் இன்றைய விசாரணையில் நீதிமன்றத்தின் நடவடிக்கையைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் நடைபெறும். 

எப்படியாயினும் தீபாவளிக்கு முன்பாக ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தது இரண்டு மாத சம்பளங்கள் முதல் தவணையாகப்பட்டுவாடா செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment