செய்திகள்
அக்டோபர் சம்பளம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதச்சம்பளத்தை உடனடியாக வழங்கிடக்கோரி மத்திய சங்கம் இயக்குநர் நிதியிடம் கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் அக்டோபர் மாதச்சம்பளம் நவம்பர் 10க்குள் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குப் போனஸ் கேட்டது அந்தக்காலம். சம்பளத்தையாவது கொடுங்கள் என்பது இந்தக்காலம். கொடுங்காலம்.
-----------------------------------------------
இலாக்காத் தேர்வுகள்
மிக நீண்ட நாட்களாக இலாக்காத் தேர்வுகள்
நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. விருப்ப
ஓய்வுக்குப்பின் BSNLலில் எல்லாப் பதவிகளும்
காலியாகிவிட்டன. எனவே ATT பதவியில் இருந்து TT
என்னும் போன்மெக்கானிக், TT பதவியில் இருந்து
TTA என்னும் JE பதவி, JE பதவியில் இருந்து JTO
மற்றும் JAO பதவிகளில் இலாக்கா காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே உடனடியாக இலாக்காத் தேர்வுகளை நடத்தக்கோரி மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. விரைவில் இலாக்காத் தேர்வுகள் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தகுதியுள்ள தோழர்கள் தயாராகவும்.
-----------------------------------------------
FTTH இணைப்புக்கள்
BHARAT FIBRE என்னும் FTTH இணைப்புக்களுக்கு
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால்
கேபிள் போன்ற பொருட்கள் இல்லாததாலும், குத்தகைக்காரர்களின் நியாயமற்ற அணுகுமுறையாலும் இணைப்புக்கள் கொடுப்பதில் மிகுந்த தாமதம் நிலவுகின்றது. குத்தகைக்காரர்களை மட்டுமே நம்பி இராமல் இணைப்புக்கள் கொடுப்பதில் BSNL முனைப்பு காட்டிடக்கோரி NFTE அகில இந்தியத் தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது அவர்கள் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.
-----------------------------------------------
வைப்பு நிதி வட்டிக்குறைப்பு
7.9 சதமாக இருந்த GPF வைப்புநிதி வட்டி ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரையிலான 6 மாத காலத்திற்கு 7.1 சதமாக குறைக்கப்பட்டது.
தற்போது மீண்டும் அக்டோபர் 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலத்திற்கும் 7.1 சத வட்டியே தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. சேமிப்பை ஊக்கப்படுத்துவதற்காக 2000ம் ஆண்டு 12 சத வட்டி வழங்கப்பட்டது. கழுதை தேய்ந்த கதையாக தற்போது வட்டி 7.1 சதத்திற்கு வந்து விட்டது.
-----------------------------------------------
EX GRATIA நான்காவது பட்டுவாடா
விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு அருட்கொடை எனப்படும் EX GRATIA கடைசிக்கட்டப் பட்டுவாடா செய்வதில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது. பல தோழர்களின் அடிப்படைச்சம்பளம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் முரண்பாடு நிலவுவதாலும், அவை சரிசெய்யப்படாததாலும் தேக்க நிலை நிலவுகிறது.
No comments:
Post a Comment