Tuesday 10 November 2020

 நிர்வாகத்துடன் சந்திப்பு

NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் மற்றும் பொருளர் தோழர்.ராஜ்மவுலி ஆகியோர் இன்று 10/11/2020 DIRECTOR (HR) மனித வள இயக்குநரைச் சந்தித்து இலாக்கா வளர்ச்சி மற்றும் ஊழியர் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

-------------------------------------------

JTO, JE  மற்றும் TT கேடர்களுக்கு விரைவில் இலாக்காத் தேர்வு நடத்திட கோரிக்கை எழுப்பப்பட்டது. விருப்ப ஓய்விற்குப்பின் உள்ள காலியிடங்களுக்கு BSNL வாரியத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் தேர்வு அறிவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------

டெலிகாம் டெக்னீசியனுக்கு இணையான MTS கேடர் உருவாக்கிட கோரிக்கை வைக்கப்பட்டது. உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு   

                  புதிய கேடர் உருவாக்கம் பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது.

-------------------------------------------

கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. சாதகமான முடிவு எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------

விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்கள் தொடர்ந்து குடியிருப்புக்களில் வசித்திட அனுமதி அளித்திடவும், குடியிருப்பு வாடகை மிக அதிகமாக உயர்த்தப்பட்டதால் ஊழியர்களுக்கு மிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். வாடகை உயர்வைப் பற்றி மறுபரிசீலனை செய்வதாக மனிதவள இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.

-------------------------------------------

குஜராத் மாநிலத்தின் தலைமை அதிகாரி NFTE சங்கத் தலைவர்களைச் சந்திப்பதில்லை என்ற தவறான செயல்  சுட்டிக்காட்டப்பட்டது. அவர் தற்போது விடுப்பில் இருப்பதாலும், அவர் பணிக்குத் திரும்பியபின் உடனடியாக சந்திப்பு நடைபெறும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment