Friday, 23 December 2016

7வது ஊதியக்குழு 
ஓய்வூதிய முடிவுகள் அமுலாக்கம் 

01/01/2016 முதல் 7வது ஊதியக்குழுவின் ஓய்வூதியம் பற்றிய பரிந்துரைகள் அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் நமது BSNL துறையில் அமுலாக்கம் செய்யப்படவில்லை. நமது மத்திய சங்கம் இதை சுட்டிக்காட்டியிருந்தது. 

DPE இலாக்கா தனது   04/08/2016 தேதிய கடிதத்தில்  
7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்திட உத்திரவிட்டது. அதனை வழிமொழிந்து DOT  22/08/2016 அன்று உத்திரவிட்டது. 
ஆனால் 4 மாதங்கள் கழித்து 21/12/2016 அன்று BSNL நிர்வாகம் வழிமொழிந்து  உத்திரவிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

BSNLலின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.7760/= ஆக உள்ளபோது 
குறைந்தபட்ச ஓய்வூதியம் 01/01/2016 முதல் ரூ.9000/=
  என உயர்த்தி அமுல்படுத்தப்படுமா ? 
என்ற கேள்வியும்... சந்தேகமும்  பலரிடம் இருந்தது.  
தற்போதைய உத்திரவின்படி  குறைந்தபட்ச ஓய்வூதியம் 
01/01/2016 முதல் ரூ.9000/=   என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

BSNLலில் அமல்படுத்தப்படும்  
7வது ஊதியக்குழு முடிவுகள்   

குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9000/= 
அதிக பட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000/=
அதிக பட்ச பணிக்கொடை ரூ.20,00,000/= (இருபது லட்சம்)

இவை யாவும் 01/01/2016 முதல் அமுலுக்கு வருகிறது. 
மேற்கண்ட உத்திரவு 01/01/2016க்கு முன் 
ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்... 
01/01/2016க்குப்பின் ஒய்வு பெறுபவர்களுக்கும் பொருந்தும்.

01/01/2016க்கு முன் ஓய்வு பெற்றவர்கள் 
தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தை பெருக்கு  மடங்கு 
2.57ஐக்கொண்டு பெருக்கினால் வருவது  புதிய ஓய்வூதியமாகும்.

1 comment:

  1. http://cpao.nic.in/pdf/clarification_raiseedby_banks22082016.pdf

    ReplyDelete