BSNLலில் அதிகாரிகள் சங்கத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் 3339 வாக்குகள்... ஏறத்தாழ 97 சதம் பதிவாகியுள்ளன. முடிவுகள் நாளை 09/12/2016 அறிவிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------
11/12/2016 அன்று நடைபெறவுள்ள JTO இலாக்காத்தேர்வு
திட்டமிட்டபடி நடைபெறும் என்று நிர்வாகம் கூறியுள்ளது.
தேர்வெழுதும் தோழர்கள் தங்களது அனுமதிச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னையில் தேர்வு திருவேற்காட்டிலுள்ள SA பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. தேர்வெழுதும் தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------------------------------
சமீபத்தில் JE - OUTSIDERS தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
மறு உத்திரவு வரும்வரை இந்த முடிவுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. இலாக்கா அமைச்சர் அலுவலகத்திலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக ஆளெடுப்பு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தாமதம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பது அனுபவ மொழி.
--------------------------------------------------------------------------------
ஓய்வு பெற்றோர் மற்றும் உள்நோயாளி சிகிச்சைக்கான
மருத்துவ பில்களை இனிமேல் நேரடியாக ERPயில் பதிவேற்றம் செய்யலாம் என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
இது நாள்வரை பணியிலுள்ள ஊழியர்களின் வெளிப்புற சிகிச்சைக்கான மருத்துவ பில்களை மட்டுமே ERPயில் பதிவேற்றம் செய்ய முடிந்தது.
--------------------------------------------------------------------------------
போன் மெக்கானிக் தோழர்களுக்கு வழங்கப்பட்ட
இலவச SIMல் தனியார் தொலைபேசிகளை அழைக்கும் வசதி
சில காலமாக நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் அந்த வசதி விரைவில் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதி கூறியுள்ளது.
--------------------------------------------------------------------------------
RELIANCE JIO தனது ரூ.149/- திட்டத்தில்...
அளவற்ற VOICE CALL, 300 MB Data மற்றும் 100 SMSகளை
28 நாட்களுக்கு அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
இதனை முறியடிக்கும் விதமாக...
நமது BSNL நிறுவனமும் ரூ.149/- திட்டத்தில்
அனைத்து நிறுவன செல்சேவைகளுக்கும்...
இலவசமாக VOICE CALL மற்றும் 300 MB Data வழங்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்கண்ட ரூ.149/- திட்டம்....
BSNLன் அலைபேசி வாடிக்கையாளர்களுக்கு
2017 புத்தாண்டுப்பரிசாக அறிவிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------
நமது BSNL நிறுவனம் நவம்பர் மாதத்தில் ஏறத்தாழ 17 லட்சம்
செல் இணைப்புக்களை கொடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகப்படியாக 1,83,702 SIMகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டிசம்பர் மாதத்தில்
அகில இந்திய அளவில் 23 லட்சம் SIM விற்பனையும், தமிழகத்தில் இரண்டு லட்சம் SIM விற்பனையும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment