BSNL ஓய்வூதியத் திட்டம்
பொதுத்துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அவர்களது அடிப்படைச்சம்பளம் மற்றும் விலைவாசிப்படி
BASICPAY + IDAயில் 30 சதத்திற்கும் மிகாமல் ஓய்வூதியப்பலன்களை 01/01/2007 முதல் அளிக்கலாம் என்பது DPE இலாக்காவின்
26/11/2008 மற்றும் 02/04/2009 தேதிய உத்திரவுகள்.
ஓய்வூதியப்பலன்களில் கீழ்க்கண்டவை அடங்கும்
- வைப்பு நிதி - EPF
- பணிக்கொடை - GRATUITY
- ஓய்வூதியப்பங்களிப்பு - PENSION CONTRIBUTION
- மருத்துவத்திட்ட பங்களிப்பு
மேற்கண்டவற்றில் EPF பங்களிப்பு 12 சதம் என்பது
அரசு நிர்ணயம் செய்தது. இதில் ஏதும் மாற்றம் செய்ய இயலாது.
GRATUITY , PENSION CONTRIBUTION மற்றும் மருத்துவத்திட்டங்களில் பங்களிப்பை அந்தந்த பொதுத்துறைகள் முடிவு செய்து கொள்ளலாம். தற்போது பல பொதுத்துறைகளில்...
ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
நெய்வேலி நிறுவனத்தில் தற்போதைய பங்களிப்பு ...
- வைப்பு நிதி - EPF - 12 சதம்
- பணிக்கொடை - 4.16 சதம்
- ஓய்வூதியப்பங்களிப்பு - 10 சதம்
- மருத்துவத்திட்ட பங்களிப்பு - 3.84 சதம்
மொத்தப்பங்களிப்பு - 30 சதம்
------------------
தற்போது BSNL நிறுவனத்தின் பங்களிப்பு
- வைப்பு நிதி - EPF - 12 சதம்
- பணிக்கொடை - 4.5 சதம்
- மருத்துவத்திட்ட பங்களிப்பு - 1.5 சதம்
மொத்தப்பங்களிப்பு - 18 சதம்
------------------
18 சதப் பங்களிப்பைத்தான் செய்து வருகிறது.
ஓய்வூதியப்பங்களிப்பை இன்னும் துவக்கவில்லை.
மொத்த 30சதத்தில் 18 போக மீதமுள்ள 12 சதத்தை...
ஓய்வூதியப்பங்களிப்பாக BSNL நிறுவனம் வழங்க வேண்டும்.
ஆனால் BSNL நிறுவனம் ஆரம்பித்து 16 ஆண்டுகள் ஆகியும்
ஓய்வூதியப்பலன்களுக்கான பங்களிப்பை இன்னும் துவக்கவில்லை.
பல்வேறு போராட்டங்களுக்குப்பின் அதற்காக குழு அமைக்கப்பட்டு
2 சதம் பங்களிப்பு செய்ய குழு பரிந்துரை செய்தது.
12 சதப் பங்களிப்பை செய்யவேண்டிய BSNL நிறுவனம்
2 சதம் மட்டுமே பங்களிப்பு செய்வோம் என்று கூறுவது தொழிலாளருக்கு இழைக்கும் துரோகம் என சங்கங்கள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தின.
தற்போது 3 சதம் அளிப்பதாக நிர்வாகம் ஒத்துக்கொண்டு
DOTயின் ஒப்புதலைக் கேட்டுள்ளது.
01/01/2007 முதலான இரண்டாவது ஊதிய மாற்ற உடன்பாடு
2010ல் போடப்பட்டும் கூட DPEயின் 2008 வழிகாட்டுதலை
BSNLலில் அமுல்படுத்த இயலவில்லை.
BSNLலில் 35000க்கும் அதிகமான...
நேரடி நியமன ஊழியர்களும் அதிகாரிகளும் பணி புரிகிறார்கள்.
BSNL நிறுவனம் ஆரம்பித்து 16 ஆண்டுகள் ஓடி விட்டன.
ஆனால் மரணமுறும் ஊழியர்களுக்கும்..
ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும்...
இன்று வரை ஒரு ஓய்வூதியத்திட்டம் இல்லை
என்பது மிகுந்த மன வேதனைக்குரியது.
BSNL நேரடி நியமன ஊழியர்களின்
நியாயமான கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு 12 சத ஓய்வூதியப்பலன்கள் அளிக்கப்பட வேண்டும்.
அது 01/01/2007 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும்.
இதற்காக சங்கங்கள் களமிறங்க வேண்டும்.
No comments:
Post a Comment