கூட்டு ஆலோசனைக்குழு
உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் முடிந்து
ஏறத்தாழ
ஓராண்டு நிறைவடையும் நிலையில் இன்னும் கூட்டு ஆலோசனைக்குழுக்கள் எங்குமே கூட்டப்படவில்லை.
காரைக்குடி மாவட்ட மாநாடு ஜூலை 2016ல் நடந்து முடிந்தபின்பு அப்போதைய மாநிலச்செயலர்
தோழர்.பட்டாபிக்கு
காரைக்குடி மாவட்டத்தின் JCM உறுப்பினர் பரிந்துரையை சிந்தாதிரிப்பேட்டை
அலுவலக முகவரிக்கு அனுப்பியிருந்தோம்.
ஏனோ இன்றுவரை மத்திய சங்கத்திலிருந்து
JCM நியமனப்பட்டியல்
அங்கீகரிக்கப்பட்டு வரவில்லை.
இதனிடையே தேசிய
கவுன்சில் மட்டுமே
மார்ச் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
BSNLEU சங்கத்தின்
9 உறுப்பினர்களும் நிரப்பப்பட்டுள்ள நிலையில் NFTE சங்கத்திற்கு இரண்டு உறுப்பினர்களே
அறிவிக்கப்பட்டுள்ளனர்.
5 உறுப்பினர்களைக்கூட நம்மால் நிரப்ப இயலவில்லை.
JCM தலைவராக சென்ற முறை தோழர்.இஸ்லாம் அகமது செயல்பட்டார்.
இம்முறை தோழர்.சந்தேஷ்வர்சிங்தான்
தலைவரென்று BSNL நிர்வாகமே சொல்லிவிட்டது.
என்னதான் நடக்கிறது
NFTEயில்?
என சாதாரண உறுப்பினர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். மைக் மயக்கத்திலும்…
கருத்தரங்குகளிலும், கைதட்டல் ஓசையிலும் தலைவர்கள் காலத்தைக் கடத்துவதாகவே தோன்றுகிறது.
இதோ எதிரே காத்திருக்கிறது
அடுத்த சரிபார்ப்புத்தேர்தல்…
No comments:
Post a Comment