NFTCL காரைக்குடி மாநில மாநாட்டு நிகழ்வுகள்
NFTCL தேசிய
தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க
தமிழக முதல் மாநில மாநாடு
காரைக்குடியில் பிப்ரவரி 11, 12 தேதிகளில் மிகச்சிறப்பாக நடந்தேறியது.
11.02.2017 அன்று மாலை வாழ்த்துரை நிகழ்ச்சியுடன் மாநாடு துவங்கியது.
மாநில செயல் தலைவர் தோழர்.மாலி தலைமை ஏற்றார்.
வரவேற்புக்குழுப் பொதுச்செயலர் தோழர் சி.முருகன் வரவேற்புரையாற்றினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் T.வெள்ளையன்,
தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கப் பொதுச்செயலர் தோழர் J.லட்சுமணன்,
NFTE சம்மேளனச்செயலர் தோழர் T.R.ராஜசேகரன்,
NFTCL சம்மேளன உதவிச்செயலர் தோழர் L.சுப்பராயன்,
முன்னாள் NFTE மாநிலப்பொருளாளர் தோழர் K.அசோக்ராஜன்,
BSNL துணைப் பொதுமேலாளர்(நிதி) தோழர்.P.சங்கிலி,
NFTE திருச்சி மாவட்டச் செயலர் தோழர் எஸ்.பழனியப்பன்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக
“ருஷ்ய புரட்சியின் நூற்றாண்டு விழா – பாட்டாளி வர்க்க கடமைகள்”
என்ற தலைப்பில் கருத்தரங்கு
NFTCL-ன் அகில இந்திய பொதுச்செயலர் தோழர் C.K.மதிவாணன்
தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
சிவகங்கை மாவட்டச் செயலர் தோழர் எஸ்,குணசேகரன்,
AITUC மாநில துணைப் பொதுச்செயலர் (உள்ளாட்சி)
தோழர் P.L.இராமச்சந்திரன்..
NFTE சம்மேளனச் செயலர் தோழர் G.ஜெயராமன்,
NFTE தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர் K.M. இளங்கோவன்
ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.
12.02.17 அன்று காலை 9 மணிக்கு
மாநாட்டில் பங்கேற்ற ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள்
மாநாட்டு அரங்கிலிருந்து மிக்க எழுச்சியுடன்…
தோழர்.C.K.மதிவாணன் அவர்கள் தலைமையில்
ஊர்வலமாகச் சென்று தந்தைப்பெரியார் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மாநாட்டு அரங்கில்..
தேசியக்கொடியினை AITUC தலைவர் தோழர் P.L.இராமச்சந்திரனும்,
சங்கக் கொடியினை NFTCL மாநிலச் செயலர்
தோழர் S.ஆனந்தனும் உணர்வோடு உற்சாகமோடு ஏற்றுவித்தனர்.
நாடி நரம்புகள் புடைக்க…
உணர்ச்சி மிகு கோஷங்களை
மூத்த தோழர்.நாகேஸ்வரன்
முழங்கினார்….
மறைந்த தோழர்களின் நினைவுகளைப் போற்றி..
தோழர் பூபதி தலைமையில் தியாக தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வரவேற்புக்குழுவின் சார்பாக தோழர்.மாரி வரவேற்புரையாற்றினார்.
மாநாட்டினை துவக்கி வைத்து
தமிழ்நாடு AITUC கட்டிடத்தொழிலாளர் சங்கப் பொதுச்செயலர்
தோழர் கே.ரவி அருமையானதொரு உரையாற்றினார்.
மண்டல வைப்புநிதி ஆணையர் திரு.சங்கரலிங்கம்,
EPF திட்டங்களின் அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
தோழர்களின் சந்தேகங்களுக்கு
பொறுமையாக அருமையாக விளக்கவுரையாற்றினார்.
ESI துணை இயக்குனர் G.கணேசன்
ESI மருத்துவ வசதிகள் பற்றி மிக மிக விரிவாக விளக்கிப் பேசினார்.
தொழிலாளர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் அயராது விளக்கமளித்தார்.
மாநாட்டில் செயல்பாட்டு அறிக்கை வாசிக்கப்பட்டு
விவாதிக்கப்பட்டு முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
NFTE காரைக்குடி மாவட்டச் செயலர் தோழர் V.மாரி,
மாநிலச் செயலர் தோழர் ஆனந்தன்,
மாநிலப் பொருளாளர் V. பாபு, ஆகியோர் கருத்துரையாற்றினர்.
NFTCL அகில இந்தியப் பொதுச்செயலர்
தோழர் C.K.மதிவாணன் சிறப்புரையாற்றினார்.
“சமவேலைக்கு சம சம்பளம்” என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து
AITUC அகில இந்திய செயல் தலைவர் தோழர் H.மகாதேவன் அவர்கள்
மிக விரிவாக எளிமையாக தோழர்களுக்கு விளக்கி சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநிலத்தலைவராக தோழர் பாபு,
மாநில செயல் தலைவராக தோழர் V.மாரி,
மாநில செயலராக தோழர் S.ஆனந்தன்,
மாநில பொருளராக தோழர்.E.சம்பத் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment