நியாயம் வென்றது…
தோழர்.அந்தோணிச்சாமி
காரைக்குடியில் பணிபுரிந்து...
மதுரைக்கு மாற்றலில்
சென்ற எழுத்தர்..
மதுரையிலே சாதி
என்னும் பெயரில் விதி விளையாடியது…
சாதிச்சான்றிதழ்
போலியாகக் கொடுத்தார் என்று
குற்றம் சாட்டப்பட்டு
பணிநீக்கம் செய்யப்பட்டார்…
மிக நீண்ட போராட்டத்தை
அந்தோணிச்சாமி நடத்தினார்…
இறுதியில் வருவாய்த்துரைகள்
அவரது சாதியை உறுதிப்படுத்தினர்…
பணிநீக்கம் செய்த
BSNL நிறுவனம் உடனடியாக
அவரைப் பணிக்கு
சேர்த்திட நீண்ட தயக்கம் காட்டியது…
டெல்லியில் இருந்து
அவரை பணியில் அமர்த்திட
DOT உத்திரவிட்டது…
DOT உத்திரவிட்ட
பின்பும் கூட மாநில நிர்வாகத்திற்கு தயக்கம்…
இடைப்பட்ட நாட்களை
என்ன செய்வது? என்ற வலுத்த சந்தேகம்…
மாநில நிர்வாகத்திற்கும்…
மாநில சங்கத்திற்கும்…
இடையிடையே வெற்றி…
வெற்றி என
தோழர்.அந்தோணிச்சாமியைப்
பற்றி
Wattsapp பெருமிதம் கொண்டது…
ஆனாலும் அந்தோணிச்சாமி
தெருவிலேதான் நின்றார்…
காரைக்காலில் தோழர்.PN.பெருமாள்
அவர்களை சந்தித்தபோது…
ஒரு ஒடுக்கப்பட்ட
ஊழியன் தெருவில் நிற்கும் நிலை கண்டு…
ஒடுக்கப்பட்டோரின்
அமைப்பு அமைதி காப்பது சரியா?
என அவரிடம் கேள்வி
எழுப்பினோம்..
நியாயம் உணர்ந்த
அவர்...
ஆவண செய்கின்றோம் என உறுதி சொன்னார்…
இறுதியில்… பிப்ரவரி
11 காரைக்குடியில்…
தோழர்.C.K.மதிவாணன் அவர்களை...
அந்தோணிச்சாமி NFTCL மாநாட்டில் சந்தித்தார்…
மனம் தளரவேண்டாம்…
நிச்சயம் பணியில் அமர்த்துவோம் என
தோழர். மதிவாணன்
உறுதி சொன்னார்…
தோழர்.அந்தோணிச்சாமி
குடும்பத்தோடு சென்று
மாநில நிர்வாகத்திடம்
தனது நிலையை முறையிட்டார்…
இதோ… இன்று
27/02/2017
தோழர்.அந்தோணிச்சாமியை
பணி அமர்த்தச் சொல்லி
DOT உத்திரவிட்டதை
மாநில நிர்வாகம் வழிமொழிந்துள்ளது…
பல ஆண்டுகள் போராட்டத்திற்குப்பின்
தோழர்.அந்தோணிச்சாமி
28/02/2017 பணியில் சேர்கிறார்…
இடைப்பட்ட காலம்
முழுமையும்
பணியாகக் கருதப்படும் என
DOT உத்திரவிட்டுள்ளது…
நன்றி சொல்ல நமக்கு
வார்த்தைகள் இல்லை…
தோழர்.இஸ்லாம்…
தோழர்.C.சிங்..
தோழர்.C.K.மதிவாணன்…
டெல்லி DOT நிர்வாகம்…
தமிழக மாநில நிர்வாகம்…
என உறுதுணை செய்து
உதவி புரிந்த
அனைவருக்கும் நமது
இதயப்பூர்வ நன்றிகள்…
எல்லாவற்றிற்கும்
மேலாக…
நாம் பெயர் சொல்ல
விழையவில்லை…
டெல்லியில்
DOT SANCHAR பவனில்…
அதிகாரிகளாகப்
பணிபுரியும்…
அன்புச்சகோதரர்களுக்கு…
மனிதநேயமிக்க நமது
தோழர்களுக்கு…
இரக்கத்தை வெளிப்படுத்திய
ஈர இதயங்களுக்கு
நமது நெஞ்சு நிறை நன்றிகள்…
தனியொருவனுக்கு
உணவில்லையேல்…
ஜெகத்தினை அழித்திட
வேண்டாம்…
நம்மால் இயன்றதை...உள்ள சுத்தியோடு..
உண்மையாகச் செய்தாலே போதுமானது…
ஆண்டுக்கணக்கில் பாடுகள் பல பட்டாலும்..
அசையா இதயத்தோடு
துன்பங்களைத் தாங்கி
மீண்டும் பணியில்
அமரும்…
தோழர்.அந்தோணிச்சாமிக்கு
நமது வாழ்த்துக்கள்…
No comments:
Post a Comment