கோக்கு... மாக்கே... தொலைந்து போ..
கோக்கு மாக்கு
செய்யப்பிறந்ததுதான்…
அமெரிக்காவின்
கோக்கும் பெப்சியும்…
கிளுகிளு திரையில்
நடிப்பவனும்
கிரிக்கெட் மட்டை
அடிப்பவனும்…
குடித்து குடித்து…
நடித்து நடித்து..
கிறுக்காக்கினர்
நாட்டு மக்களை..
கிறுகிறுக்க வைத்தனர்..
இளைஞர்களை…
தேசம்...
கோக்கையும்
பெப்சியையும் குடித்தது…
கோக்கும் பெப்சியும்…
கோதாவரியை...தாமிரபரணியைக் குடித்தது…
காலம் கனிந்தது…
காளை எழுந்தது…
காலை புலர்ந்தது…
வாடிவாசல் திறந்திட…
கோடிக்கைகள் கூடின…
கோபக்குரல் எழுப்பின…
வாடிவாசலும் திறந்தது…
தன்மான வாசலும்
திறந்தது…
தன்னாட்டு பெருமை
கண்டான்…
தமிழன்….
பன்னாட்டு சுரண்டல்
எதிர்த்தான்…
கோக்கு மாக்கு
பானத்தின் மீது
கோபக்கணல் தொடுத்தான்…
மானங்கெடுக்கும்
பானத்தின் மீது
தடை என்னும் பாணத்தைத்
தொடுத்தான்…
போலி பானத்தை விற்கமாட்டோம்…
சுய மானத்தை விற்கமாட்டோம்…
என மானமுடன் அறைகூவினான்…
NFTCL மாநில மாநாட்டில்…
மார்ச் முதல் தேதி…முதல்..
கோக்கு மாக்கு
பானத்தை விற்கமாட்டோம்..
குரல் கொடுத்தார்
நம் வெள்ளையனும்….
இன்றே 75 சதம்
விற்பனை சரிவு…
கோக்கு குடிப்பவன்
இன்று பேக்கு…
கவர்ச்சி பானம்
கக்கூஸ் பானமாகிப்போனது…
வாணிபக் கொள்ளையனுக்குப்
பாடம் சொன்ன
வணிகர்சங்க வெள்ளையனுக்கு
வாழ்த்துக்கள்…
ஆண்டாண்டு காலமாக…
பன்னாட்டு சுரண்டல்
பற்றி…
விடிய விடியக்
கூவினான்…
செங்கொடித்தோழன்…
இன்றுதான் விடிந்துள்ளது…
தமிழ் வானம் சிவந்துள்ளது…
No comments:
Post a Comment