தீர்ந்தது... திறனுக்கேற்ற
கூலி பிரச்சினை
ஒப்பந்த ஊழியர்களுக்கு
அவரவர்கள் செய்யும் பணிக்கேற்ற
கூலி கொடுக்கப்பட வேண்டும் என்ற நமது
NFTCL சங்கத்தின்
கோரிக்கை தமிழகத்தைப்போலவே
சென்னைத் தொலைபேசியிலும்
அமுலுக்கு வந்துள்ளது.
24/08/2017 அன்று சென்னைத் துணை முதன்மைத் தொழிலாளர் ஆணையர்
முன்பாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இதற்கான 19/08/2017 தேதியிட்ட உத்திரவை
சென்னைத் தொலைபேசி நிர்வாகம் DY.CLC அவர்களிடம் சமர்ப்பித்தது.
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்திரவையொட்டியே சென்னைத்தொலைபேசியிலும் தொழிலாளர்கள் தரம் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காக நிர்வாகத்தரப்பில் அனைத்துக் கோட்டங்களிலும் குழு ஒன்று அமைக்கப்பட்டு ஊழியர்களின்
பணித்தன்மை கண்டறியப்பட்டு உத்திரவு அமுல்படுத்தப்படும்.
சென்னைத்தொலைபேசி மாநில நிர்வாகத்திற்கும்...
மாநில நிர்வாகத்தின் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட
திருமதி.ஹேமமாலினி
DGM,
திருமதி.சங்கரி, AGM ஆகியோருக்கும்...
நீண்ட நாள் பிரச்சினையைத் தீர்த்து வைத்த
DY.CLC திரு.சீனுவாஸ் அவர்களுக்கும்...
நமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்தாகுக.
தொழிலாளர்
ஆணையரிடம் இப்பிரச்சினையை எழுப்பித் தீர்வு கண்ட
NFTCL பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்களுக்கும்...
மாநிலச்செயலர்
தோழர்.ஆனந்தன் அவர்களுக்கும்...
NFTCL மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கும் நமது வாழ்த்துக்கள்.
திறனுக்கேற்ற கூலி கைக்கெட்டியுள்ளது.
இனி வாய்க்கு எட்ட வேண்டும்.
சம்பந்தப்பட்ட மாவட்ட,
கோட்டச்செயலர்கள்
தங்கள் பகுதிகளில் மேற்கண்ட உத்திரவை அமுல்படுத்திட
கூடுதல் கவனம்
செலுத்திட வேண்டும்.
No comments:
Post a Comment