Thursday, 10 August 2017

கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை
EXTRA INCREMENT
10/06/2013க்கு முன்பு ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA நிர்ணயம் ஏறத்தாழ 16000க்கும் அதிகமான தோழர்களுக்கு தமிழகத்தில் செய்து முடிக்கப்பட்டது.  ஆனால் 600க்கும் மேற்பட்ட தோழர்களின் நிர்ணயம் நிறுத்தி வைக்கப்பட்டது. காரைக்குடி மாவட்டத்தில் 36 தோழர்களுக்கு மறு நிர்ணயம் செய்யக்கோரி அவர்களது சேவைக்குறிப்பேடு திருப்பி அனுப்பப்பட்டது. DOT CELL இரண்டு காரணங்களைக் கூறியது.
  •  ஓய்வு பெற்ற NON EXECUTIVE  ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை EXTRA INCREMENT ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
  • அதிகாரிகளுக்கு 5 கட்டப்பதவி உயர்வின் போது ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்படுகிறது. POST BASED PROMOTION எனப்படும் நிரந்தரப்பதவிகளில் பதவி உயர்வு வழங்கப்படும் போதும் கூடுதலாக ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்படுகின்றது.

மேற்கண்ட ஆண்டு உயர்வுத்தொகை நிர்ணயம் செல்லத்தக்கதல்ல எனவும் மறு நிர்ணயம் செய்து அனுப்புமாறும் மாவட்ட நிர்வாகங்களை DOT CELL பணித்திருந்தது. இது மிகப்பெரும் அநீதியாகும். எனவே AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக சென்னை CATல் வழக்கு தொடுக்கப்பட்டது. மேற்கண்ட வழக்கில் 08/08/2017 அன்று இடைக்காலத்தடை வழங்கப்பட்டுள்ளது.

இது போலவே அதிகாரிகளுக்கு POST BASED PROMOTIONல் வழங்கப்பட்ட ஆண்டு உயர்வுத்தொகையை மறுதலித்து DOT வெளியிட்ட உத்திரவை எதிர்த்து அதிகாரிகள் சங்கமான AIBSNLEA  டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்காலத்தடை பெற்றுள்ளது. DOT நீதிமன்றத்தில் தனது பதிலை 24/08/2017 அன்று தாக்கல் செய்யும். வழக்கின் முடிவு நிச்சயம் சாதகமாகவே வெளியாகும்.
அதுவரை தோழர்கள் பொறுமை காத்திட வேண்டும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், பணிபுரியும் அதிகாரிகளுக்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து உடனடியாக வழக்கு மன்றம் சென்று நியாயம் கோரிய AIBSNLEA மற்றும்
AIBSNLPWA சங்கங்களுக்கு நமது வாழ்த்துக்கள்.   

No comments:

Post a Comment