BSNL
- MTNL சீரமைப்பு
இன்று
21/02/2019 DCC எனப்படும்
DIGITAL
COMMUNICATIONS COMMISSION
(முந்தைய
TELECOM COMMISSION)
தொலைத்தொடர்பு
ஆணையம் டெல்லியில்
கூடவுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன.
DCC
தொலைத்தொடர்பில் கொள்கை முடிவெடுக்கும்
அதிகாரம் படைத்த உச்சக்கட்ட அமைப்பாகும்.
எனவே
இந்தக் கூட்டம் மிகமுக்கியமானதாக கருதப்படுகின்றது.
இன்று நடைபெறும் DCC கூட்டத்தில்
BSNL
மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து
முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
BSNL
மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின்
தலைவர்கள் ஏற்கனவே அரசிடம்
சமர்ப்பித்துள்ளனர்.
அவற்றில்…
ஓய்வு
பெறும் வயதை 58 என குறைப்பது…
அதன்
மூலம் 2019-20 நிதியாண்டில் சுமார் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைக்க வகை செய்வது…
விருப்ப
ஓய்வுத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம்
மேலும் 3000 கோடி சம்பளச்செலவைக் குறைப்பது…
4G
அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்குவது…
காலியாக
உள்ள கட்டிடம் மற்றும் இடங்களை
வணிகரீதியாகப் பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது…
போன்ற
ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.
இது
தவிர… சீரமைப்பு சம்பந்தமாக
DOT
தனது பங்காக சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளது..
அவற்றில்…
ஊழியர்களின்
சம்பளச்செலவு நிறுவனங்களின்
மிகப்பெரிய பிரச்சினையாக கருதப்படுவதால்…
மிக அதிக எண்ணிக்கையில்
இருக்கும்
ஊழியர் மற்றும் அதிகாரிகளை BBNL, BHARAT NET போன்ற நிறுவனங்களுக்கு மாற்றுவதன்
மூலம்
சம்பளச் செலவினங்களை பரவலாக்குவது…
நிறுவனங்களின்
அன்றாடச் செலவுகளை சந்திக்கவும்,
நிதி ஆதாரங்களை
உறுதிப்படுத்தவும் வங்கிகளிடம் கடன் கோருவது….போன்ற
ஆலோசனைகளை DOT முன்வைத்துள்ளது.
இன்றைய
DCC கூட்டத்தில்…
BSNL
மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும்…
BSNL
நிறுவனத்திற்கு 2100Mhz அலைவரிசையில்
4G
அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்படும்
என
எதிர்பார்க்கப்படுகின்றது. அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில்
இறுதி
ஒப்புதல் மத்திய அமைச்சரவையிடம் பெறப்படும்.
எனவே
இன்று நடைபெறும் DCC கூட்டம்
மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
BSNL
ஊழியர்களும் அதிகாரிகளும் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளுக்காக போராடியும் மூன்று நாட்கள்
வேலைநிறுத்தம்
நடத்தியும் தங்களது எதிர்ப்பை
அரசிற்கு மிக வலுவாக தெரிவித்துள்ளதால்..
இன்று நடைபெறும் DCC
கூட்டம் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு
செய்வதற்கான முடிவுகளை நிதானத்தோடு
மேற்கொள்ளும்
என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment