மெய்ப்பொருள் காண்பதறிவு...
VRSம் NFTEன் எச்சரிக்கையும்...
விருப்ப ஓய்விற்கு விருப்பம் கொடுத்த
தோழர்களின் சிந்தனைக்கு...
NFTE மத்திய செயற்குழு நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் நகரில் நடைபெற்றது.
விருப்ப ஓய்வு குறித்து தனது பார்வையை...
எச்சரிக்கையை மத்திய செயற்குழு வெளியிட்டுள்ளது.
விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களைத்
தனிக்குழுவாக (SEPERATE GROUP) நிர்வாகம் கருதக்கூடாது.
நிர்வாகம் அவ்வாறு கருதுமேயானால்...
விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு வருங்காலங்களில்
ஓய்வூதிய மாற்றம் போன்றவை நடைபெற வாய்ப்பில்லை...
-------------------------------------------
விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கும்
தற்போதைய ஓய்வூதிய விதி FR 37-A பொருந்தும்
என DOT எங்கும் தெளிவுபடுத்தவில்லை....
இது மிகவும் மோசமான நிலையாகும்....
விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு
ஓய்வூதியம் சம்பந்தமாக எந்த உத்திரவாதமும்
இல்லை என்பதையே இது காட்டுகிறது...
-------------------------------------------
தற்போதைய ஓய்வூதிய விதிகளின்படி
60வயதில் ஓய்வு பெறும் ஊழியர்
ஓய்வு பெற்று
ஓராண்டு காலத்திற்குள்
COMMUTATION எனப்படும் தொகுப்பு ஓய்வூதியத்திற்கு
விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
இதற்கு மருத்துவச்சான்று தேவையில்லை.
ஆனால் தற்போது விருப்ப ஓய்வில் செல்லும்
ஊழியர்கள்
அவர்கள் விருப்ப ஓய்வில் சென்ற பிறகு
60 வயதுக்கு வந்த பின்புதான்
COMMUTATIONக்கு
விண்ணப்பிக்க முடியும்
என விருப்ப ஓய்வு உத்திரவு சொல்கிறது.
இவ்வாறு சொல்லும் அதிகாரம்
DOT மற்றும் BSNLக்கு கிடையாது.
உரிய உத்திரவை ஓய்வூதிய இலாக்கா வெளியிட்டால் மட்டுமே
வருங்காலத்தில் 60 வயதை அடைந்த ஒரு விருப்ப ஓய்வு ஊழியர்
COMMUTATIONக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே உடனடியாக இந்த விஷயத்தில்..
ஓய்வூதிய இலாக்காவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
-------------------------------------------
PENSION CONTRIBUTION எனப்படும் ஓய்வூதியப்பங்களிப்பு இன்னும் முழுமையாக
BSNL நிறுவனத்தால் செலுத்தப்படவில்லை. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் விருப்ப ஓய்வில் செல்லும்போது
அவர்களுக்கான ஓய்வூதியப்பங்களிப்பு 31/01/2020 வரை முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும்.
ஓய்வூதியப்பங்களிப்பு முழுமையாக செலுத்தப்படாத சூழலில்
ஓய்வூதியம் DOTயால் வழங்கப்படாத
நிலையே நீடிக்கும்.
ஓய்வூதியப்பங்களிப்பு போலவே GPF வைப்புநிதியும் இன்னும் முழுமையாக செலுத்தப்படவில்லை.
எனவே வைப்புநிதி பட்டுவாடாவிலும் தாமதம் கடுமையாகத் தொடரும்.
வங்கிப்பிடித்தம், சொசைட்டிப்பிடித்தம் மற்றும் ஆயுள் காப்பீட்டுப் பிடித்தம்
போன்றவை இன்றளவும் செலுத்தப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் NO DUES சான்றிதழ்
அளிக்காது.
மேலும் கட்டவேண்டிய நிலுவையை நிலுவை செலுத்தப்படாத
மே 2019ல் இருந்து கணக்கிட்டு
ஊழியர்களின் பட்டுவாடாவில் பிடித்தம் செய்திடக் கோரும். இதுவும் ஒரு தொல்லை தரும் நிகழ்வாக விருப்ப ஓய்வில் செல்பவர்களுக்கு அமையும்.
EX-GRATIA எனப்படும் அருட்கொடை பட்டுவாடாவின்
முதல் தவணை 2019-2020 நிதியாண்டிலும்...
அடுத்த தவணை 2020-2021 நிதியாண்டின்
முதல் காலாண்டிலும் பட்டுவாடா செய்யப்படும்
என
BSNL பொதுவாக கூறியுள்ளது. குறிப்பாக இந்த தேதிக்குள் பட்டுவாடா செய்யப்படும் என தெளிவான
உத்திரவு
நிர்வாகத்தால் இன்னும் இடப்படவில்லை.
மேலும் பட்டுவாடா செய்யப்படும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு வருமான வரியாகப்
பிடித்தம் செய்யப்படும் அவல நிலையும் உள்ளது.
எனவே விருப்ப ஓய்விற்கு விருப்பம் தெரிவித்த ஊழியர்கள் மேற்கண்டவற்றைப் பற்றி
சிந்தித்து முடிவெடுக்க
NFTE மத்திய செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
No comments:
Post a Comment