Wednesday, 13 November 2019


VRSல்... வேண்டும் விவேகம்.. 

2000ம் ஆண்டில் BSNL உருவானபோது
இதே நெருக்கடியும் ஊழியர்களிடையே பதற்றமும்,
நிச்சயமற்ற தன்மையும் நிலவியது.

குப்தா மீது விமர்சனங்களும் குறையவில்லை.
ஆனால் ஐயங்கள் எல்லாவற்றுக்கும் தீர்வு கண்டதோடு
ஊழியர்களிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கிட
எழுத்துப்பூர்வமான கேபினட் உத்தரவாதங்களை
உடன்பாடாக தோழர் குப்தா பெற்றார்.

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு
புதிய நெருக்கடிகள் உருவாகிவிட்டன.
VRS குறித்த குப்தாவின் முன் மொழிவை
அன்று ஏற்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இன்று VRS - ல் செல்ல இருக்கும் ஊழியர்களுக்கு
நம்பிக்கை உத்தரவாதத்தை யார் அளிப்பது?

நிர்வாக உத்தரவுகள் போதுமானவை அல்ல.
அவை அதிகார வர்க்கத்தின் 
கையில் இருப்பவை... மாறக்கூடியவை....

சம்பள மாற்றம்,பென்ஷன் மாற்றம் உட்பட
இதர சலுகைகள் இயல்பாய் 
ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைப்பது போல்
VRS ல் செல்லும் ஊழியர்களுக்கும் 
கிடைக்க வேண்டியது அவசியம்.

அரசின் நிர்ப்பந்தம் காரணமாகவே 
அவர்கள் வெளியேறுகிறார்கள்.
குப்தாவின் அணுகுமுறைகளில் இருந்து
இன்றைய தொழிற்சங்கங்களின் தலைமைகள்
இப்பிரச்சினைகளைக் கையாள வேண்டும்.
எல்லா சங்கங்களும் கூட்டாக ஒற்றுமையுடன்
அரசாங்கத்தைச் சந்திக்க வேண்டும்.

இயற்கையாய் ஓய்வு பெற்றவர்களுக்கும்,
VRS ல் செல்பவர்களுக்கும் இடையே
எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது.
நிறுவனத்தின் தொடர் இருப்புக்கு உத்தரவாதம் பெற வேண்டும்.
வேலை நிலைமைகளை தொழிற்சங்கங்களுடன் கலந்து பேச வேண்டும்.
அசையா சொத்துக்களைப் பராமரிக்கவும் விற்கவும்
அனைத்து கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் குழு
மேற்பார்வையிட வேண்டும் போன்ற உறுதி மொழிகளை
கேபினட் முடிவாகப் பெற வேண்டும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்திடையே
பேச்சுவார்த்தைகள் நடைபெற்று அவற்றிற்கிடையே
எந்த உடன்பாடும் இல்லாதது துரதிருஷ்டமானது.
ஜனநாயகமற்றதும் கூட.
தொழிற்சங்கங்கள் மீது இந்த அரசின் அணுகுமுறை
அலட்சியமாகவே உள்ளதுஇன்னும் காலம் உள்ளது.
விவேகம்தான் வேண்டும்...
-----------------------------------------------------------------------------------------
தோழர். G.ஜெயராமன்
முன்னாள் சம்மேளனச்செயலர் NFTE

No comments:

Post a Comment