Friday, 8 November 2019


VRSதான்... கடவுளப்பா...

வாலியின் வைர வரிகள்...

காசேதான் கடவுளப்பா...
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா...

கைக்கு கை மாறும் பணமே ...
உன்னை கைப்பற்ற நினைக்குது மனமே...

நீ தேடும்போது வருவதுண்டோ ?
விட்டு போகும்போது சொல்வதுண்டோ?

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால்
அவனும் திருடனும் ஒன்றாகும்...

வரவுக்கு மேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்...

களவுக்கு போகும் பொருளை எடுத்து
வறுமைக்கு தந்தால் தருமமடா..

பூட்டுக்கு மேலே பூட்டைப் போட்டு
பூட்டி வைத்தால் அது கருமமடா...

கொடுத்தவன் முழிப்பான்...
எடுத்தவன் முடிப்பான்...
அடுத்தவன் பார்த்தால் சிரிப்பானே...

சிரித்தவன் அழுவதும்..
அழுதவன் சிரிப்பதும்...
பணத்தால் வந்த நிலைதானே...

கையிலும் பையிலும் ...
ஓட்டமிருந்தால் கூட்டமிருக்கும் உன்னோடு...

தலைகளை ஆட்டும் பொம்மைகள் எல்லாம்
தாளங்கள் போடும் பின்னோடு....

கல்லறை கூட சில்லறை இருந்தால்....
வாய் திறந்தே மொழி பேசுமடா...

VRS எண்ணிக்கை....
இன்றே 80000 தாண்டிப்போகுமடா....
-------------------------------------------
விருப்ப ஓய்வு வந்ததிலிருந்து...
வாலியின் சாகா வரிகள்...
காதில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன....

No comments:

Post a Comment