Saturday 29 May 2021

 மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

HEALTH INSURANCE FOR BSNL EMPLOYEES 

தற்போதைய BSNL MRS திட்டத்தால்  எந்தப் பயனும் இல்லாத சூழல் நிலவுகின்றது. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு முறையாக பில்கள் பட்டுவாடா செய்யப்படாத காரணத்தினால் எல்லா மருத்துவமனைகளுமே BSNL ஊழியர்களுக்கு MRS திட்டத்தில் சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விட்டன. தற்போதைய கொரோனா கொடுந்தொற்றுக் காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. எனவே ஊழியர்கள் பங்களிப்புடன் மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் ஒன்றை BSNL நிறுவன ஏற்பாட்டில் அமுல்படுத்த வேண்டும் என்று சங்கங்கள் குறிப்பாக AIBSNLEA சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

 தற்போது அந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்திரவை 28/05/2021 அன்று BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 4 அதிகாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.  மருத்துவக்காப்பீட்டு நிறுவனங்களுடன் மேற்கண்ட குழு கலந்து பேசி தனது பரிந்துரையை BSNL நிர்வாகத்திற்கு அளிக்கும். அதன்பின் முடிவு எடுக்கப்படும்.

 புதிய பயனுள்ள மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் அங்கீகரிக்கப்பட்டால் அந்த திட்டம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.  ஓய்வு பெற்ற ஊழியர்கள் இனி BSNL MRS திட்டத்தை நம்பி பலனில்லை. BSNL நேரடி ஊழியர்கள் பணிபுரிந்து வருமானம் ஈட்டி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவப் பலன்களை அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே ஓய்வு பெற்ற ஊழியர் சங்கங்கள் நமக்கு நாமே திட்டத்தின் அடிப்படையில் நாடுதழுவிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தங்களது பங்களிப்பில் உருவாக்கிக் கொள்வதே சாலச்சிறந்தது.

No comments:

Post a Comment