எளியவர்களின் எழுச்சி மிகு போராட்டம்
சென்னையில் நடைபெற்ற NFTCL தொடர் முழக்கப்போராட்டம் |
அக்டோபர் - 15
அன்புத்தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளில்..
வலியவர்கள் வாழும் சென்னை சேப்பாக்கத்தில்...
எண்ணிக்கையில் அடங்கா எளியவர்கள்...
NFTCL என்னும் பதாகை ஏந்தி...
கடலூர்... காரைக்குடி... பாண்டிச்சேரி...திருச்சி...சென்னை
என பல்வேறு பகுதிகளிலும் இருந்து திரண்டு வந்து
வங்கக் கடலோரம் வர்க்க உணர்வோடு சங்கமித்தனர்...
மாநிலத்தலைவர் தோழர்.மாலி தலைமையேற்றார்...
மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் விளக்கவுரையாற்றினார்...
பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் எழுச்சிமிகு சிறப்புரையாற்றினார்...
மாநிலம் முழுவதுமிருந்து வந்த தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்...
ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் உரிமைகளை.. சலுகைகளை..
BSNL நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றக்கோரி
உணர்வோடு... உரிமைக்குரல் எழுப்பினர்...
ஊடகங்கள் படையெடுத்து வந்தன...
ஒப்பந்த ஊழியர்களின் போராட்ட நிகழ்வை
இடைவிடாமல் படம் பிடித்துத் தந்தன...
அடையாள அட்டை... உரிய கூலி... உரிய நேரத்தில் கூலி...
வைப்பு நிதி.. மருத்துவ அட்டை.. போனஸ்... என
எல்லாவற்றிலும் ஏமாற்றத்தையேக் கண்ட...
உழைத்து... உழைத்து... இளைத்துப்போன உள்ளங்களில்
கோபம் வங்கக்கடலாய்ப் பொங்கியது...
அடிப்படை உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால்
மாநிலந்தழுவிய வேலை நிறுத்தமே...
அடுத்த கட்ட நடவடிக்கை என ஒன்றுபட்ட குரல் ஒலித்தது...
டிசம்பர் 11ல் காரைக்குடியில் நடக்கவுள்ள
முதல் மாநில மாநாட்டிற்கு முன்...
உரிமைகளை அடைந்திட சூளுரைத்து
எளியவர்களின் எழுச்சிமிகு போராட்டம் நிறைவுற்றது....
மாநிலம் முழுவதுமிருந்து வந்து கலந்து கொண்ட தோழர்களுக்கும்
காரைக்குடி... தேவகோட்டை... திருவாடானை...சிவகங்கை என
காரைக்குடி மாவட்டத்தின் சார்பாகக் கலந்து கொண்ட தோழர்களுக்கும்
நமது வாழ்த்துக்களும்... நன்றிகளும்...
தோழமையுடன்...
சி.முருகன்
NFTCL - ஒருங்கிணைப்பாளர்
காரைக்குடி.
No comments:
Post a Comment