போனஸ் பட்டுவாடாப் பணிகளை இன்று 20/10/2016 ERPயில் முடிப்பதற்கு சம்பளப்பட்டுவாடா செய்யும் கணக்கு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். நிதி ஒதுக்கீடு வந்தபின் போனஸ் பட்டுவாடா செய்யப்படும். நிதி வந்து விட்டால் இந்த வாரமே போனஸ் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணமுற்ற தோழர்களுக்கான போனஸ் இந்த மாத சம்பளப்பணியுடன் சேர்த்துக் கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
================================================
தீபாவளி பண்டிகை நெருங்குவதால்
இம்மாத சம்பளத்தை 25/10/2016க்குள்
பட்டுவாடா செய்யக்கோரி நமது மத்திய சங்கம்
நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
================================================
17/07/2016 அன்று நடந்த JAO இலாக்காத்தேர்வில்
குளறுபடியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
அதைக் கணக்கில் கொள்ளாமல் முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன.
எனவே தேர்வு முடிவுகளை மீண்டும் பரிசீலிக்குமாறு
நமது மத்திய சங்கம் நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
================================================
BTEU BSNL சங்கம் NFTE தலைமையிலான தேசிய தொழிலாளர் கூட்டமைப்பில் அணி சேர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக BTEU BSNL சங்கம் FNTO சங்கத்துடன் அணி சேர்ந்திருந்தது.
================================================
இராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில்
DELOITTE குழு பரிந்துரையின்படி BUSINESS AREA வணிகப்பகுதிகள் அமுலாக்கத்தை மேற்கொள்ள CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. தமிழகத்தில் வணிகப்பகுதிகள் அமுலாக்கம்
ஏப்ரல் 2017ல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
================================================
அரசு ஊழியர்கள் தங்களது விடுப்பை 300 நாட்களுக்கும் மேலாகவும் சேர்த்து வைத்துக்கொள்ளலாம் என பஞ்சாப் நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் நமக்கொன்றும் பலனில்லை.
மதிக்கப்படாத தீர்ப்புக்கள் நம் தேசத்தில் ஏராளம்... ஏராளம்...
No comments:
Post a Comment