ஏற்பும்...மறுப்பும்...
13 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி
NFTE தலைமையிலான கூட்டமைப்பு நாடு தழுவிய ஆர்ப்பாட்டமும்... தர்ணாவும் நடத்தி முடித்துள்ளது. நமது கோரிக்கைகள் மீதான நிலைபாட்டை BSNL நிர்வாகம் தனது 21/10/2016 தேதியிட்டக் கடிதத்தில் நமது சங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.
ஏற்கப்பட்டவை
- போனஸ் 2014-15க்கு உத்திரவு வெளியிடப்பட்டு விட்டது. 2015-16க்கான போனஸ் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.
- 3வது ஊதிய மாற்றக்குழு அமைப்பது பற்றி DPE மற்றும் DOTயின் வழிகாட்டுதல்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- TM பயிற்சி முடித்து காத்திருப்போருக்கான பதவி உயர்வுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. செங்கல்பட்டுப்பிரச்சினை சங்கங்களுடன் கலந்து ஆலோசித்தபின் முடிவெடுக்கப்படும்.
- விடுப்பைக்காசாக்கும் LEAVE ENCASHMENT வசதி DOT ஊழியர்கள் போலவே BSNLலில் நியமனம் பெற்ற ஊழியர்களுக்கும் பொருந்தும்.
- BSNL நியமன ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத்திட்டம் DOTயின் ஒப்புதல் பெற்று அமுல்படுத்தப்படும்.
- மருத்துவத்திட்டத்தில் உள்ள குறைகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட குழு நவம்பரில் கூடுகிறது. அதன் பின் உரிய திருத்தங்கள் செய்யப்படும்.
மறுக்கப்பட்டவை
- 4வது சனிக்கிழமை விடுமுறை என்பது ஏற்புடையதல்ல. வங்கி சேவைக்கும் தொலைத்தொடர்பு சேவைக்கும் மிக வித்தியாசம் உள்ளது.
- நான்கு கட்டப்பதவி உயர்வில் SC/ST ஊழியர்களுக்கு இட ஒதுக்கீடு, தேர்வெழுதிப் பெற்ற பதவி உயர்வைக் கணக்கில் கொள்ளாமல் இருப்பது... குறைவான ஊதிய நிலையில் பதவி உயர்வு அளிப்பது போன்றவற்றை பல முறை பேசி விட்டதால் புதிதாகப் பரிசீலிக்க இயலாது.
- தேக்கநிலை ஊதியம் பற்றி 3வது ஊதியக்குழு முடிவெடுக்கும்.
- வணிகப்பகுதி உருவாக்கம் ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. எனவே சங்கங்களுடன் பேசுவதற்கு அவசியமில்லை.
- நன்னடத்தை விதி 55 ii (b) பற்றி ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு விட்டது.
No comments:
Post a Comment