ஒப்பந்த ஊழியரும்... உரிமை மீட்பும்...
இந்தாண்டு ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும்
ஒப்பந்த ஊழியர்களுக்குப் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
போனஸ் அளவு தொகையில் மாற்றம் இருந்தாலும் போனஸ் என்பதை ஒப்பந்த ஊழியருக்கு மறுக்க இயலாது என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. தொடர்ந்து போனஸ் பிரச்சினையை தொழிலாளர் நல அதிகாரிகளிடம் இடைவிடாமல் எடுத்துரைத்து அவர்களிடமிருந்து உரிய வழிகாட்டுதல்களை... உத்திரவுகளை தமிழ் மாநிலம் மற்றும் சென்னைத்தொலைபேசி நிர்வாகங்களுக்கு அனுப்பியதில்
NFTCL சங்கத்தின் பங்கு அளப்பரியது.
போனஸ் பிரச்சினையைப் போலவே
சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில்
கேபிள் பணி, எழுத்தர் பணி மற்றும் காவல் பணி புரியும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு அவரவர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டக் கூலியை BSNL நிர்வாகம் வழங்கிட உத்திரவிடக் கோரி சென்னை துணை முதன்மை தொழிலாளர் ஆணையரிடம் NFTCL சங்கம் பிரச்சினையை எழுப்பியிருந்தது. தொடர்ந்து பல சுற்றுக்கள் பேசிய பின் தற்போது Deputy . CLC அவர்கள் 25/10/2016 அன்று தமிழகம் மற்றும் சென்னை தலைமைப் பொதுமேலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
BSNL நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு திறனுள்ள பணிகளில் ஈடுபடுத்தப்பட்டாலும் அவர்கள் அனைவருக்கும் UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. இது சட்ட விதிகளுக்கு முரணானது.
எனவே BSNLலில் கேபிள் பணி, எழுத்தர் பணி மற்றும் காவல் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்சக் கூலி சட்டத்தின்படி அவரவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் ஒப்பந்த ஊழியர்கள் ஒழிப்புச்சட்டம் விதி
25 (v) (a ) மற்றும் (b)ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என
Deputy . CLC தெரியப்படுத்தியுள்ளார்.
அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை
04/11/2016 அன்று சென்னையில் நடைபெறும்.
தோழர்.ஆனந்தன் தலைமையில் நாமும் பங்கு பெறுவோம்.
சமவேலைக்கு சம சம்பளம் வழங்க வேண்டும்
என உச்ச நீதிமன்றம் மீண்டும் அழுத்தமாக
கூறியுள்ள இந்த வேளையில்...
Deputy . CLC அவர்களின் மேற்கண்ட
தலையீடு முக்கியத்துவம் பெறுகிறது.
BSNL நிர்வாகம் இனியும் தொடர்ந்து
ஒப்பந்த ஊழியர்களை சுரண்ட இயலாது.
NFTCL சுரண்ட விடாது...
தொழிலாளர்கள் விழித்து விட்டார்கள்...
NFTCL தொழிலாளருக்காக எழுந்து விட்டது...
தமிழகத்தில் பத்தாண்டுகள் பின்னோக்கிப் போயிருந்த
ஒப்பந்த ஊழியர் வாழ்வை மீட்டெடுக்க
NFTCL பொதுச்செயலர் தோழர்.மதிவாணன்
தலைமையில் பாடுபடும்
NFTCL ஒப்பந்த ஊழியர் சங்கத்திற்கும்..
அதன் உணர்வு மிக்க மாநிலச்செயலர்
தோழர்.ஆனந்தன் அவர்களுக்கும்
நமது வாழ்த்துக்கள்...
சபாஷ்... ஆனந்தா...
No comments:
Post a Comment