அடிமை நோய் அகற்றிய மருத்துவன்
மருத்துவ மாணவரான சே ஓராண்டு விடுப்பெடுத்து
இரு சக்கர வாகனத்தில் தனது நண்பர் ஆல்பர்ட்டோவுடன்
தென்னமெரிக்கா முழுவதும் தனது பயணத்தை துவக்கினார்...
தொழுநோய் சிகிச்சையை சிறப்புப் பாடமாக எடுத்திருந்த சே..
வழி முழுவதும் தொழுநோய் சிகிச்சை மையங்களுக்கு சென்றார்...
தொழு நோயின் கொடுமையையும்...
வறுமை...தொழுநோயை விட கொடுமையாக இருப்பதையும் கண்டார்...
மண்ணையும்.. மலையையும் சுரண்டி
சுரங்கம் தோண்டும் தொழிலாளர் வாழ்வை
முதலாளித்துவம் முழுவதுமாகச் சுரண்டும் நிலை கண்டார்...
பொதுவுடைமை கொள்கையைப் பரப்பி வந்த தோழர்கள்
குளிருக்கு போர்வை கூட இல்லாமல் வாடி நின்ற கோலம் கண்டார்...
தனது அனுபவங்களை குறிப்புகளாக்கினார்...
மோட்டார் சைக்கிள் டைரி என்ற அவரது குறிப்புகள்
உலகப்புகழ் பெற்றவை... பின்னாளில் படமானது...
புரட்சியாளர்களுக்கு பாடமானது...
ஒரு பயணம் ஒரு பயணத்தை துவக்கியது...
ஒரு மருத்துவனை... ஒரு சாதாரண மனிதனை...
அடிமை நோய் அகற்றும் பயணத்திற்கு தயார் செய்தது....
அடிமைத்தளை அகற்றும் பயணத்தில்...
பயணம்... உயிரைப் பணயம் வைத்தது...
ஓரிடத்தில் நில்லாமல்..
உலகம் முழுக்க தோழர் சேயின் விடுதலைப் பயணம் தொடர்ந்தது...
அடிமைத்தனங்கள் உள்ளவரை... சுரண்டல்கள் தொடரும்வரை...
அவர் தொடங்கிய பயணங்கள் என்றும் முடிவதில்லை...
அக்டோபர் - 9 அன்று
இந்த மண்ணில் விதைக்கப்பட்ட
சுயநலமற்ற ஒரு புரட்சியாளனின்
நினைவுகளை ... தோழர். சேகுவேராவை...
நெஞ்சில் ஏந்துவோம்....
No comments:
Post a Comment