Monday, 12 June 2017

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 

மத்திய அரசு ஊழியர்களுக்கு…
2016 முதல் ஊதியக்குழு அமுலாக்கம்…
ஒப்பந்த ஊழியர்களுக்கும் கூட…
19/01/2017 முதல் புதிய சம்பளம் அமுலாக்கம்…
ஆனால்… BSNL ஊழியர்களுக்கோ….
ஊதியக்குழு அமைப்பதற்கு கூட அனுமதி தராத நிலை…

லாபம் என்னும் நிபந்தனையில்
ஊதியமாற்றம் ஊசலாட்டம்…

சாதனைகள் பல சொல்லும் மத்திய அரசே…
உந்தன் சாதனையில்
எங்களின் ஊதியமாற்றமும் சேராதா?

மாதந்தோறும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள்
புதிய சம்பளம் காணாமலேயே ஓய்வு பெறும் நிலைமை…
2017 பிறந்து ஆறு மாதங்கள் ஆகியும்…
ஊதியக்குழு அமைவதற்கான அறிகுறிகள் இல்லாத கொடுமை…

இந்நிலை மாற்றிட…. ஜூன் – 14 

NFTE கூட்டணி சங்கங்களின் சார்பாக
நாடு தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தோழர்களே… அணி திரள்வீர்…
---------------------------------------------------------------------------------------

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
14/06/2017 – புதன் – மாலை 5 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

No comments:

Post a Comment