Friday, 2 June 2017

திறனுக்கேற்ற கூலி - சமரசப் பேச்சுவார்த்தை
DY.CLC முன்னிலையில் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை 

BSNL
லில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் திறனற்றவர்கள் UNSKILLED என்று வகைப்படுத்தி 
BSNL நிர்வாகம் சம்பளம் வழங்கி வருகிறது
இது தொழிலாளர்களை சுரண்டும் செயல்.

தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள்
கேபிள் பணி, எழுத்தர் பணி, காவல்பணி, ஓட்டுநர் பணி
என பல்வேறு திறன்மிக்கப் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றார்கள். அவர்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள உரிய கூலியைக் கொடுக்க வேண்டும் என்பதே நமது சங்கத்தின் நிலைபாடு.

எனவே நமது NFTCL சார்பாக மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் 
துணை முதன்மைத்தொழிலாளர் ஆணையரிடம் வழக்குத் தொடுத்திருந்தார். பல கட்டப்பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்த நிலையில் 02/06/2017 அன்று மீண்டும் BSNL நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் DY.CLC முன்னிலையில் சென்னையில் சமரசப் பேச்சு வார்த்தை நடைபெற்றது

NFTCL பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள் 
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது முக்கியத்துவம் பெற்றது
BSNL நிறுவனத்தில் துப்புரவுப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைத் தவிர ஏனையோர் அனைவரும் திறன் படைத்த தொழிலாளர்களே என நமது சார்பில் வாதிக்கப்பட்டது. முடிவில் ஒப்பந்த ஊழியர்கள் மாவட்டம் வாரியாக எத்தனை பேர் எந்தெந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றார்கள் என்ற விவரத்தைக் கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு உரிய கூலி கொடுக்கப்பட வேண்டும் என DY.CLC BSNL நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளார். அடுத்த கட்டப்பேச்சுவார்த்தை
29/06/2017 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

திறன்மிக்கப் பணிகளில் தொழிலாளியைப் பயன்படுத்திக்கொண்டு திறனற்ற பணிக்கான கூலியைத்தருவது 
மாபெரும் உழைப்புச்சுரண்டலாகும்
இந்த உழைப்புச்சுரண்டலை எதிர்த்து 
NFTCL தொடர்ந்து போராடும்…. நிச்சயம் வெல்லும்...

மாமேதை மார்க்சின் 200வது பிறந்த ஆண்டில்...
இந்த லட்சியத்தை உறுதியுடன் மேற்கொள்வோம்

பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டவர்கள்

NFTCL சார்பாக
தோழர்.மதிவாணன்
தோழர்.ஆனந்தன்
தோழர்.அன்பழகன்
தோழர்.சம்பத்

நிர்வாகத்தின் சார்பாக
திருமதி.ஹேமமாலினி DGM(HR) – CHENNAI
திருமதி.சங்கரி AGM(EST) – CHENNAI
திரு.இராஜசேகரன் AGM – TN CIRCLE

No comments:

Post a Comment