வேலைக்கேற்ற
கூலி
உழைப்புக்கு வாய்ப்பு…
எல்லாருக்கும் வேலை வாய்ப்பு..
ஆற்றலுக்கேற்ற வேலை வாய்ப்பு…
வேலைக்கேற்ற கூலி..
உழைப்புக்கேற்ற கூலி..
இதுவே சோஷலிசம். ..
என்று ரஷ்யா சென்று
திரும்பி வந்த பின்..
சோசலிசத்தைப் பற்றிய தனது சிந்தனையை..
வெளியிட்டார் தவத்திரு
குன்றக்குடி அடிகளார்…
தவத்திரு அடிகளாரின்
சிந்தனையைத்தான்
தொழிலாளர் நலச்சட்டங்களும்
வலியுறுத்துகின்றன…
தொழிலாளருக்குத்
திறன் அடிப்படையில் கூலி வழங்க வேண்டும்
என்பது இந்தியத்
தொழிலாளர் சட்ட விதியாகும்….
ஆனால் முதலாளிகள்
மட்டுமல்ல…
ஆளுகின்ற அரசுகளே…
அரசு நிறுவனங்களே…
சட்டங்களைக் காலில்
போட்டு மிதிப்பதுதான்
நமது தேசத்தில்
நாம் அன்றாடம் காணும் காட்சியாகும்…
அதன் ஒரு சாட்சியாகத்தான்
நாம் பணிபுரியும் BSNL துறையில்
ஒப்பந்தத் தொழிலாளர்கள்
உறிஞ்சப்படும் நிலை காண்கின்றோம்…
வேலைக்கேற்ற கூலி… உழைப்புக்கேற்ற கூலி.. என்பது
இங்கே இன்னும்
அமுல்படுத்தப்படவில்லை….
எல்லோரும் இந்நாட்டு மன்னர்...
ஆனாலும்..
எல்லோரும் இங்கே UNSKILLED... தொழிலாளி..
NFTCL சங்கம் இப்பிரச்சினையை
தொழிலாளர் ஆணையர் முன் எழுப்பியது..
பல கட்டப்பேச்சுவார்த்தைகளுக்குப்
பின்… DY.CLC
துணை
முதன்மைத்தொழிலாளர் ஆணையரின் உத்திரவின் பேரில்…
தற்போது தமிழக
BSNL நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களிடம்…
UNSKILLED/ SEMI
SKILLED/ SKILLED பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டிருக்கும் ஒப்பந்த ஊழியர்களின்
விவரங்களை
20/06/2017க்குள்
சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழக மாவட்ட நிர்வாகங்கள்
ஒப்பந்த ஊழியர் விவகாரத்தில்
உண்மையான புள்ளி
விவரங்களை அளிக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் NFTCL சங்கம்..
BSNL நிர்வாகத்தின் மீது
கடுமையான குற்றச்சாட்டுக்களை..
துணை முதன்மைத்தொழிலாளர்
ஆணையரிடம்
கூறியுள்ளதாக தனது 05/06/2017
சுற்றறிக்கையில்
தமிழ் மாநில நிர்வாகம் கூறியுள்ளது…
நாம் கூறியது குற்றச்சாட்டு
அல்ல…
நாம் கூறியதெல்லாம்
சுரண்டல் என்னும் உண்மை…
உண்மையைத்தவிர
வேறொன்றுமில்லை…
எனவே இந்திய தேசத்தின்
மாபெரும் BSNL துறை…
இந்த தேசத்தின்
சட்டங்களை மதிக்கும் என நம்புகிறோம்…
பல்வேறு பணிகளில்
உழைக்கும் தொழிலாளிக்கு..
அவனுக்கு உரிய
கூலியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்…
வேலைக்கேற்ற கூலி..
உழைப்புக்கேற்ற கூலி..
இதுவே சோஷலிசம்...
இதுவே நமது கோஷம்…
No comments:
Post a Comment