Wednesday, 14 June 2017

ஜூன்...15
முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்


இன்று … இந்திய தேசம்
இளைஞர்களின் தேசம்…
நாளை… இந்திய தேசம்
முதியவர்களின் தேசம்..
மூத்தவர்களின் தேசம்…

மூத்தோர் மீதான வன்கொடுமை…
மானுடத்தின் மீதான பெருங்கொடுமை…

மூத்தோர்  மீது நேசம்..
இதுவே நம் மண் வாசம்…

மூத்தோரை வழிபடுவோம்...
மூத்தோர் வழிநடப்போம்...

இளமை கனவு காணும்…
முதுமை நனவு பேணும்…

முதுமை போற்றுவோம்…
மனிதம் போற்றுவோம்…
------------------------------------------------------------------------------------------
அதுதான் முதுமை…

ஓய்வு பெற்ற தோழர் ஒருவர்… 78.2 என்னாச்சு… என்னாச்சு.. என்று
நாளும் நம்மை நச்சரித்தார்…DOT CELLலில் பேசிப்பேசி…
ஒருவழியாக நிலுவையைப் போடவைத்தோம்…
அன்று ஒரு நாள்…மகிழ்ச்சியோடு வந்தார்…
67000 ரூபாய் நிலுவை வந்ததாக அகமகிழ்வோடு கூறினார்…
நிலுவையை என்ன செய்தீர்கள்? என்று கேட்டோம்…
அதுவா? என் பேரனுக்கு ரொம்ப நாளா இருசக்கர வாகனம் வாங்க ஆசை.. 
எனவே அந்தப்பணத்தை அப்படியே அவனிடம் எடுத்துக் கொடுத்து விட்டேன்… 
நமக்கு வரக்கூடிய ஓய்வூதியமே போதும் என்றார்…
நீண்ட நாட்கள் நிலுவை நிலுவை என்று நித்தமும் நம்மை நச்சரித்த அவர் 
நிலுவையில் ஒரு பைசா கூட தான் பயன்படுத்தவில்லை…

எதையும் தானே அனுபவிப்பது அல்ல முதுமை…
சேர்ந்து அனுபவிப்பதுதான் முதுமை…
கெடுத்து மகிழ்வதல்ல… முதுமை கொடுத்து மகிழ்வது…
முதுமை போற்றுவோம்… முதுமை போற்றுவோம்…

No comments:

Post a Comment