எங்கே ஜெகன்?…
நேர்மை தொலைந்து விட்டதே…
நியாயம் வளைந்து விட்டதே…
எங்கே ஜெகன் ?…
ஒற்றுமை ஒழிந்து விட்டதே…
வேற்றுமை பெருகி விட்டதே…
எங்கே ஜெகன் ?…
அணைக்கும் கரங்கள் அருகி விட்டதே…
அழிக்கும் கரங்கள் வளர்ந்து விட்டதே….
எங்கே ஜெகன் ?…
கோரிக்கை முழக்கம்
குறுகி விட்டதே…
கேளிக்கை வழக்கம் எகிறி விட்டதே…
எங்கே ஜெகன் ?…
லஞ்சமும் ஊழலும்
நாறி விட்டதே…
வஞ்சமும் துரோகமும்
ஊறி விட்டதே…
எங்கே ஜெகன் ?…
செங்கொடி செம்மை
இழந்து விட்டதே…
செம்மையாய் பறக்க
மறந்து விட்டதே…
எங்கே ஜெகன் ?…எங்கே ஜெகன் ?…எங்கே ஜெகன் ?…
No comments:
Post a Comment