கண்டுகொள்ளப்படாத
வேலை நிறுத்தம்…
ED என்று அழைக்கப்பட்டு
இப்போது GDS என்று
அழைக்கப்படும்
அப்பாவி கிராமப்புற
அஞ்சல் ஊழியர்கள்
21/05/2018 முதல்
நாடுதழுவிய
காலவரையற்ற வேலைநிறுத்தத்தை...
மேற்கொண்டுள்ளனர்.
எட்டாவது நாளான
இன்று 28/05/2018
நிர்வாகத்துடன்
நடைபெற்ற பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்தது…
எனவே போராட்டம்
தொடர்கிறது…
மாதம் எட்டாயிரம்
பத்தாயிரம் மட்டுமே
சம்பளமாகப் பெற்று
வாழ்க்கை நடத்தும்..
கிராமப்புற அஞ்சல்
ஊழியர்களின்
வாழ்வு மிகக்கொடியது…
மத்திய அரசு வழக்கம்
போலவே…
தனது அலட்சியப்
போக்கைக் கடைப்பிடிக்கின்றது…
உயிர்ப்பலி போராட்டங்களையே
கண்டுகொள்ளாத அரசு…
ஒடுக்கப்பட்ட
GDS ஊழியர்கள் போராட்டத்தைக்
கண்டுகொள்ளாததில்
வியப்பேதுமில்லை…
காலம் காலமாக துன்புறும்
கிராமப்புற ஊழியர்களுக்கு
ஆதரவாக
நிரந்தர ஊழியர்களும்
களம் இறங்கினாலன்றி
அவர்களுக்கு விடியல்
கிடையாது…
No comments:
Post a Comment