செ ய் தி க ள்
மே மாதச்சம்பளம்
பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தைத்
தொடர்ந்து தாமதப்படுத்துவது தற்போது BSNLலில் வாடிக்கையாகி விட்டது.
ஏப்ரல் மாதச்சம்பளம் மே-22 அன்றுதான் பட்டுவாடா செய்யப்பட்டது.
இன்னும் மே மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனிடையே MTNLலில் இன்று 04/06/2020 மே மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவிப்புக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதச்சம்பளம் மே-22 அன்றுதான் பட்டுவாடா செய்யப்பட்டது.
இன்னும் மே மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்படவில்லை. இதனிடையே MTNLலில் இன்று 04/06/2020 மே மாதச்சம்பளம் பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவிப்புக்கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
BSNLலில் பணவரவு தற்போது கூடி வருகின்றது என்று செய்திகள் வருகின்றன. ஆனால் உழைத்தவனின் கூலி எப்போது கொடுக்கப்படும் என்ற செய்தி மட்டும் எங்கும்... எப்போதும் தென்படுவதில்லை.
BSNLலில் சம்பளம் பட்டுவாடா
என்பது மர்மங்கள் நிறைந்த கதையாக உள்ளது.
-----------------------------------
விலைவாசிப்புள்ளி
அகில இந்திய விலைவாசிப்புள்ளி
அளவு குறைவதால்
ஜூலை 2020 முதல் கிடைக்கவேண்டிய IDA 1.8 அளவு குறையும்
என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது ஏப்ரல் 2020ல் 3 புள்ளிகள் உயர்ந்து 329 ஆக உள்ளது. இன்னும் மே மாதப்புள்ளிகள்
அறிவிக்கப்படவில்லை. மே மாதத்தில் புள்ளிகள் உயர்வதற்கான வாய்ப்பில்லை என்று தெரிகின்றது.
மே மாதத்தில் 4 புள்ளிகள் கூடினால் மட்டுமே IDA குறையாது. 5 புள்ளிகள் கூடினால் மட்டுமே
0.2 அளவிற்கு உயர்வு இருக்கும். 5 புள்ளிகளைக் கூட விடாமல் அரசு பார்த்துக்கொள்ளும். எனவே ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படாத
IDA வெட்டு உருவாகும் நிலை உள்ளது.
-----------------------------------
மருத்துவப்படி விருப்பம்
மருத்துவப்படி என்பது கழுதை தேய்ந்து
கட்டெறும்பான கதையாகி விட்டது. OP என்னும் புறசிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்ட அளவுத்தொகை
ஒரு மாதம் என்பதில் இருந்து
15 நாட்களாக பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டது.
ஆனால் வியாதிகளோ பலமடங்கு பெருகி வருகின்றது.
புறசிகிச்சைக்கான மருத்துவப்படி என்பது
மாதம் ரூ.1000 என்றும் குறைக்கப்பட்டு விட்டது. தற்போது கிருமிநாசினி வாங்கவும், கைகழுவவும், முகமூடி
வாங்கவும் கூட இந்த 1000 பத்தாது.
இந்த சிறப்பு வாய்ந்த மருத்துவப்படியைப் பெறுவதற்கான
விருப்பக்கடிதங்களை 30/06/2020க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க
வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட அலுவலகங்களில் ஓய்வு பெற்றோர் கூட்டம்
அலைமோதுகிறது. 01/04/2019க்குப்பின் ஓய்வு பெற்றவர்களும், ஜனவரி 2020ல் விருப்ப ஓய்வு
பெற்றவர்களும், ஏற்கனவே கொடுத்த விருப்பத்தில் மாற்றம் செய்ய நினைப்பவர்களும் மட்டுமே
விருப்பக்கடிதங்களைக் கொடுக்க வேண்டும். VRSல் சென்ற தோழர்கள் பலருக்கு இன்னும் ஓய்வூதிய
உத்திரவு PPO வெளியிடப்படவில்லை. அத்தகைய தோழர்கள் இன்னும் PPO வரவில்லை என்பதைக் குறிப்பிட்டு
விருப்பக்கடிதம் கொடுக்கவும்.
விருப்பக்கடிதம் கொடுக்கவும்.
-----------------------------------
LIFE CERTIFICATE – உயிர்ச்சான்றிதழ்
இந்தியாவில் தற்போது தொடர்ந்து
உயிர் வாழ்வதே பெரிய சாதனைதான். எனவே ஓய்வு பெற்ற தோழர்கள் ஆண்டுதோறும் "உள்ளேன் ஐயா" நாங்கள் உயிரோடு
இருக்கின்றோம் என்று உயிர்ச்சான்றிதழ் அளிக்க வேண்டும். 01/02/2019க்குப்பின் ஓய்வூதியப்பட்டுவாடா
மின்னணு மயமாக்கப்பட்டு விட்டது. எனவே SAMPANN என்னும் மின்னணு முறையில் ஓய்வூதியம்
பெறும் தோழர்கள் அவர்கள் ஓய்வு பெற்று ஓராண்டு கழித்து தங்கள் உயிர்ச்சான்றிதழை அளிக்க
வேண்டும். உதாரணத்திற்கு ஜூன் 2019ல் ஓய்வு பெற்ற தோழர்கள் ஜூன் 2020ல் உயிர்ச்சான்றிதழ்
அளிக்க வேண்டும். அதனை DIGITAL LIFE CERTIFICATE என்னும் மின்னணு முறையில் அளிக்கலாம்.
தற்போது எல்லா இடங்களிலும்
COMMON SERVICE CENTRE என்னும் பொது சேவை மையங்கள் செயல்படுகின்றன.
அங்கு சென்று தங்களது ஆதார், வங்கி எண் மற்றும் PPO எண் ஆகியவற்றை அளித்து எளிதாக உயிர்ச்சான்றிதழை
சமர்ப்பிக்கலாம். 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக தோழர்கள் நமது அலுவலகம்
நோக்கி வரவேண்டிய அவசியமில்லை. தபால் அலுவலகங்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் கட்டாயமாக
தாங்கள் ஓய்வூதியம் பெறும் தபால் அலுவலகங்கள் மூலமாக மட்டுமே உயிர்ச்சான்றிதழை அளிக்க
வேண்டும். 01/02/2019க்குப் பின் ஓய்வு பெற்றவர்கள் தபால் அலுவலகங்கள் மூலம் ஓய்வூதியம்
பெற்றால் அவர்கள் SAMPANN மின்னணுத்திட்டத்தில் இணைக்கப்படவில்லை. 2020ல் விருப்ப ஓய்வில்
சென்ற தோழர்கள் ஜனவரி 2021ல் மட்டுமே உயிர்ச்சான்றிதழை அளிக்க வேண்டும்.
அதுவரை அமைதியாக
இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment