அருட்கொடை – EXGRATIA பட்டுவாடா
விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு ஜூன் 2020க்குள்
அருட்கொடை – EXGRATIA முழுமையாகப் பட்டுவாடா செய்யப்படும் என அரசுத்தரப்பு உறுதியளித்திருந்தது.
ஆனால் உறுதிமொழி வழக்கம்போல் காற்றில் விடப்பட்டுள்ளது. முதல்தவணையில் 50 சதம் பட்டுவாடா
செய்வதற்குப்பதில்
31.3 சதம் மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டது.
பெரும்பகுதி தோழர்களுக்கு
அவர்கள் வாங்கிய கடனுக்கே சரியாகப் போய்விட்டது.
தற்போது EXGRATIA பட்டுவாடாவிற்காக
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
MTNLக்கு 579 கோடியும், BSNLக்கு 3021 கோடியும் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிதி ஒதுக்கீட்டின்படி 22.5 சதமே பட்டுவாடா ஆகும். எனவே
இன்னும் 46.2 சதம் பட்டுவாடா பாக்கியுள்ளது.
நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் காரணமாக
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய இயலவில்லை என்று கூறப்படுகின்றது. மேற்கண்ட நிதியை ஜூன்
30க்குள்
பயன்படுத்த வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.
எனவே EXGRATIA இரண்டாவது தவணை
ஜூன் 30க்குள் பட்டுவாடா செய்யப்படும். பட்டுவாடா சார்ந்த அலுவலகப்பணிகள் 27/06/2020
இன்றைக்குள்
முடிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருப்ப ஓய்வு EXGRATIA பட்டுவாடாவில் அரசு
தனது வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. மிச்சமுள்ள 46.2 சத அருட்கொடையையாவது
ஜூலை மாதத்திற்குள்
பட்டுவாடா செய்ய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
என்பதே விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்களின் எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment