Saturday 21 November 2020

 IDA முடக்கம்

 

கொரோனா காலத்து நிதி நெருக்கடியை முன்னிட்டு...

மத்திய அரசு தனது பொதுத்துறை ஊழியர்களுக்கு 01/10/2020 முதல் வழங்கப்பட வேண்டிய IDA விலைவாசிப்படி உயர்வை முடக்கி உத்திரவிட்டுள்ளது.  இதற்கான உத்திரவை DPE இலாக்கா 19/11/2020 அன்று வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட ஊழியர் விரோத உத்திரவில் கீழ்க்கண்ட அநீதிகளை மத்திய அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு இழைத்துள்ளது.

01/10/2020 முதல் வழங்கப்பட வேண்டிய 5.5 சத IDA விலைவாசிப்படி உயர்வு முடக்கப்படுகிறது.

அக்டோபர் 2020 IDA மட்டுமின்றி...

ஜனவரி 2021 மற்றும் ஏப்ரல் 2021ல் வழங்கப்பட வேண்டிய IDA விலைவாசிப்படி உயர்வும் முடக்கப்படும். மொத்தம் 9 மாதங்களுக்கு IDA முடக்கப்படும். 

01/07/2021 அன்று அரசு மீண்டும் பரிசீலனை செய்து IDA வழங்க உத்திரவிட்டால் 01/07/2021 முதல் மீண்டும் IDA வழங்கப்படும். 

01/10/2020 , 01/01/2021 மற்றும்  01/04/2021 ஆகிய காலாண்டுகளில் கிடைக்கக்கூடிய  மொத்த IDA உயர்வு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு 01/07/2021 முதல் மொத்தமாக IDA வழங்கப்படும்.

ஆனால் 01/10/2020 முதல் 30/06/2021 வரையிலான 9 மாத காலத்திற்கு IDA நிலுவை வழங்கப்படாது. 

மேற்கண்ட IDA முடக்க உத்திரவு... 2017, 2007, 1997, 1992 மற்றும் 1987ம் ஆண்டுகளில் ஊதிய மாற்றம் பெற்ற அனைவருக்கும் பொருந்தும். 

மேற்கண்ட ஊழியர் விரோத உத்திரவைக் கண்டித்து

NFTE தமிழ் மாநிலச்சங்கம் NFTE சம்மேளன தினமான 24/11/2020 அன்று தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

தோழர்கள் தவறாது பங்கு கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment