மார்ச் – 23 – மாவீரர்கள் தினம்
மார்ச் – 23
பகத்சிங் – சுகதேவ் – இராஜகுரு
நினைவு தினம்
இந்தப்போர் எங்களோடு தொடங்கவுமில்லை....
எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை...
என்று புரட்சியாளர் பகத்சிங்
சொன்னது போல்
அக்கப்போர்கள் காலமெல்லாம்
தொடரவே செய்கின்றன...
மதவெறிக்கு எதிரான....
சாதிவெறிக்கு எதிரான...
வறுமைக்கு எதிரான...
ஊழலுக்கு எதிரான...
போர்களைத் தொடர்ந்து
செய்வோம்...
வீர இளைஞர் பகத்சிங்
புகழ் பாடுவோம்...
==================================
புரட்சி என்பது வெடிகுண்டுகள்
துப்பாக்கிகள் மீதான
வழிபாடல்ல...
தனிமனிதர்கள் வஞ்சம்
தீர்த்துக்கொள்வதற்கு
அதில் இடமில்லை...
புரட்சி என்பது ரத்தவெறி
கொண்ட
மோதலாகத்தான் இருக்கவேண்டும்
என்பதில்லை...
புரட்சி என்பதன் மூலம்
அநீதியான இந்த சமூகம்
மாற்றியமைக்கப்பட வேண்டும்
என்பதே எங்கள் இலட்சியம்...
பகத்சிங்...
No comments:
Post a Comment