தட்டுத்தடுமாறும்
EXGRATIA பட்டுவாடா
8 சத EXGRATIA பட்டுவாடாவிற்கு 09/03/2021 அன்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் பின் பட்டுவாடா நடைபெறும் என்று BSNL நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் பல மாநிலங்களில் பட்டுவாடா செய்வதற்கான பணிகள் நிறைவடையாத காரணத்தால் நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் நிலவுகிறது.
மொத்தமுள்ள 78323 விருப்ப ஓய்வு ஊழியர்களில் இன்னும் 1234 ஊழியர்களுக்கு பல்வேறு காரணங்களால் பணிகள் முடிவடையவில்லை. தமிழகத்தில் இன்னும் 54 பேருக்கு கணக்கீடு முடிக்கப்படவில்லை. அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநிலத்தில் 310 பேருக்கு தேக்கம் நிலவுகிறது.
சாதிச்சான்றிதழ் சரிபார்ப்பு, VIGILANCE சான்றிதழ், ஒழுங்கு நடவடிக்கைகள் என்று பல்வேறு காரணங்களால் தேக்கம் நிலவுகின்றது. எனவே இன்று 10/03/2021 மாலை 05 மணிக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என DIRECTOR (HR) இயக்குநர் மனிதவளம் மாநில நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் 16/03/2021 முதல் வங்கி வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. மார்ச் 13 இரண்டாவது சனிக்கிழமை. எனவே நாளை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் இந்த வாரம் பட்டுவாடா நடைபெற வாய்ப்புள்ளது. இல்லையெனில் தாமதம் நேரலாம்.
EXGRATIA பட்டுவாடா பிரச்சினையில் CORPORATE அலுவலகம் மாநில நிர்வாகங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாலும் தொடர்ந்து மாநிலங்களில் தாமதம் நிலவத்தான் செய்கிறது.
No comments:
Post a Comment