அதிகாலை முதல் அந்திசாயும்
வரை...
உதிரம் சிந்தினான்...
நெருப்பில் நீந்தினான்..
உழைத்து உழைத்து இளைத்த
மனிதன்...
ஒரு நாள் எழுந்தான்... ஒன்றாய்
எழுந்தான்...
விடிந்தது பொழுது... முடிந்தது
இரவு என...
கூத்தாடினான்...
கொண்டாடினான்...
விடிந்ததா... இரவு ?
முடிந்ததா இழவு ?
இன்னும் நீள்கிறது...
இடைவிடாமல் தொடர்கிறது...
செய்த வேலைக்கு கூலி...
செயல் திறனுக்கேற்ற கூலி...
குறைந்தபட்சக்கூலி...
குடும்பம் காத்திடும் கூலி...
வாழ்க்கைக்கேற்ற வசதி...
உணர்வுக்கேற்ற உரிமை...
வந்து சேர்ந்ததா? ...
வளம் சேர்த்ததா?
இன்னும் இல்லை...
இனியும் இல்லை...
இங்கே வலுத்தவன் வாழ்கிறான்...
உழைத்தவன் நோகிறான்..
இந்நிலை மாறவேண்டும்...
உழைப்பாளி இனம் உயர வேண்டும்...
கரம் உயர்த்திக் குரலொலிப்போம்...
வேண்டும் மே தினம்...
வேண்டும்.. தினம்... தினம்...
வேண்டும் மே தினம்...
மீண்டும் மேதினம்..
மேதின நல்வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment