சிறகொடிந்த பறவை
1992ம் ஆண்டு ஏப்ரல்
முதல் தேதி துவங்கப்பட்டு
பல்வேறு விருதுகளைப்
பெற்று வானூர்திப்பயனாளர்களின் பெருமதிப்பையும் பெற்ற JET விமான நிறுவனம்
2019 ஏப்ரல் 19ந்தேதியோடு
தனது சேவையை முடக்கிக்கொண்டுள்ளது.
27 ஆண்டுகள் வானில் சிறகடித்துப்
பறந்த பறவை
இதோ நிதிப்பற்றாக்குறையால்
சிறகொடிந்து நிற்கின்றது.
ஏறத்தாழ 20 ஆயிரம் ஊழியர்களின்
எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை.
வண்டிக்கு பெட்ரோல் போடக்கூட
காசில்லை.
ஊழியர்களுக்கு சம்பளம்
போட முடியவில்லை.
எந்த வங்கியும் கடன்
கொடுக்கத் தயாரில்லை.
JET நிறுவனத்தின் மானம்
காற்றில் பறந்த நிலையில்
27 வருடங்கள் காற்றில்
சிறகடித்துப் பறந்த JET AIRWAYS...
இன்று சிறகொடிந்து கிடக்கின்றது.
JET ஊழியர்கள் தலைநகர்
டெல்லியில் ஒன்று திரண்டு
எங்களைக் காப்பாற்றுங்கள்
என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஏறத்தாழ 4 லட்சம் வரை சம்பளம் பெற்ற ஊழியர்கள்
ஒருலட்சம் சம்பளத்திற்கு
மற்ற விமானசேவை நிறுவனங்களின்
வாசலில் காத்துக்கிடக்கின்றனர்.
தொழில்நுட்பமல்லாத பிரிவில்
பணி செய்தவர்களின் நிலை
இன்னும் மோசமானது.
அன்றாட வாழ்விற்கே அல்லாட
வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.
மத்திய அரசு வழக்கம்
போல் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.
இத்தகைய நிலையில்
20000 ஊழியர்களின்
குடும்ப நிலை பெரும்
கேள்விக்குறியாக நிற்கின்றது.
பேய் அரசாண்டால் தெருவில்
பிணங்களே நடமாடும்...
மனிதர்கள் நடமாட்டம்
குறைந்து விடும்...
இத்தகைய சூழலே இன்று
நம் தேசத்தில் நிலவுகிறது.
சிறகொடிந்த JET நிறுவனத்தை
நினைக்கையில் நெஞ்சம் கனக்கின்றது.
வங்கி ஊழியர்கள் சங்கம்
JET நிறுவனத்தை அரசு நிறுவனமான
AIR INDIA எடுத்துக்கொள்ள
வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.
நலிந்து போன தனியார்
நிறுவனங்களை
அரசு நிறுவனங்கள் தத்து
எடுத்துக்கொள்ள வேண்டும்
என்று நமது தேசத்தில்
குரல் ஒலிக்கத்துவங்கியுள்ளது.
நிச்சயம் என்றேனும் ஒருநாள்...
எல்லோரையும் ஏமாற்றும்
JIO நிறுவனம் வீழ்ந்துபடும்.
அன்று JIOவை BSNL உடன்
இணைத்து விடுங்கள் என்று குரல் எழும்.
இது நிச்சயம்... சர்வ
நிச்சயம்...
நேற்று... RELIANCE
COMMUNICATIONS
இன்று... JET
AIRWAYS....
நாளை... RELIANCE
JIO...
No comments:
Post a Comment