மாவட்டங்கள் இணைப்பு
BUSINESS AREA - MERGER OF SSAs
BSNLலில்
SSA தகுதியில் இருந்த சிறு சிறு மாவட்டங்களை பெரிய மாவட்டங்களுடன் இணைத்து வணிகப்பகுதி
BUSINESS AREA என்ற பெயரில் நிர்வாக அமைப்புக்களை உருவாக்க DELOITTEE குழுவின் பரிந்துரையின்
அடிப்படையில் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுவரை நடைமுறைக்கு வராமல் இருந்தது. தற்போது இந்த வணிகப்பகுதி நிர்வாக நடைமுறையை
01/06/2019 முதல் அமுல்படுத்த வேண்டும் என
CORPORATE நிர்வாகம் 26/04/2019 அன்று உத்திரவிட்டுள்ளது.
தமிழகம்,
குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, ஒரிசா, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் கொல்கத்தா
தொலைபேசி
ஆகிய பகுதிகளில் வணிக இணைப்பு மேற்கொள்ளப்பட
வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில்...
காரைக்குடி மதுரையுடனும்...
விருதுநகர் தூத்துக்குடியுடனும்...
திருநெல்வேலி நாகர்கோவிலுடனும்...
கும்பகோணம் தஞ்சாவூருடனும்...
குன்னூர் கோவையுடனும்
தர்மபுரி சேலத்துடனும் இணைக்கப்படவுள்ளன.
சென்ற முறை
பாண்டிச்சேரி வணிகப்பகுதியுடன் இணைக்கப்பட்ட கடலூர் தற்போது தனித்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
யூனியன் பகுதி என்பதால்
பாண்டிச்சேரியும் தனித்த வணிகப்பகுதியாக இயங்கும்.
தமிழகத்தைப்
பொறுத்தவரை
விருதுநகர் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மட்டுமே
இணைப்பு பிரச்சினையாக
விளங்கும்.
காரைக்குடி
மாவட்டம்
மிகுந்த ஆள்பற்றாக்குறையுடன் செயல்பட்டு வந்தது.
சிறிய மாவட்டம் என்பதால்
உரிய கவனம் செலுத்தப்படாமல் இருந்தது.
தற்போது மதுரையுடன் இணைவது என்பது வரவேற்புக்குரியதே.
வணிகப்பகுதி இணைப்புக்குப் பின் நிர்வாக அதிகாரம் வணிகப்பகுதி வசம் சென்று விடும்.
அதன் பின் சங்கங்கள் எந்த அமைப்பில் செயல்படுவது என்பது கேள்விக்குறியாகும். வணிகப்பகுதி என்பது சோதனை முயற்சியாகும். இது நிறுவனத்திற்கு எவ்வகையில்
பயன் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எது வரினும்
ஏற்றுக்கொண்டு செயல்படத் தயாராவோம்...
No comments:
Post a Comment