Wednesday, 18 September 2019

அகில இந்தியத் தேர்தல் முடிவுகள் 


BSNL நிறுவனத்தில் 8வது தொழிற்சங்க உறுப்பினர் 
சரிபார்ப்புத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 
அகில இந்திய அளவில் மீண்டும் BSNLEU சங்கமே
முதன்மைச் சங்கமாக வெற்றி பெற்றுள்ளது. 
நமது NFTE சங்கம் இரண்டாவது சங்கமாக வெற்றி பெற்றுள்ளது. 
BTEU BSNL  சங்கம் 3வது பெரிய சங்கமாகவும், 
FNTO சங்கம் 4வது சங்கமாகவும் வாக்குகள் பெற்றுள்ளன.

சென்ற தேர்தலில் 49.56 சத வாக்குகள் பெற்று ஏறத்தாழ 50 சதத்தைத் தொட்ட BSNLEU சங்கம் தனது ஊழியர் நல மெத்தனத்தால் 
6 சத வாக்குகளை இழந்து 43 சத வாக்குகளையே பெற்றுள்ளது. 

சென்ற முறை 32 சத அளவிற்கு வாக்குகள் பெற்ற
 NFTE சங்கம் இம்முறை  3 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்று 
35 சத வாக்குகளைப் பெற்றுள்ளது. 

சென்ற முறை 2.96 சத வாக்குளைப் பெற்றிருந்த ஆளும் BJP அரசின் ஆதரவு சங்கமான BTEU BSNL இம்முறை கூடுதல் வாக்குகள் பெற்று 
4 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள்  பெற்றுள்ளது. 

பரிதாபத்திலும் பரிதாபமாக FNTO சங்கம் 3.86 சத வாக்குளை மட்டுமே பெற்று 4வது இடத்திற்கு இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. 
இன்று அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளின் அறிவிப்பு வெளியிடப்படும்.

தற்போதைய வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில்...
JCM கூட்டாலோசனைக்குழுவில் BSNLEU  சங்கத்திற்கு 8 இடங்களும்...
NFTE சங்கத்திற்கு 6 இடங்களும் கிட்டும்.  7 சத வாக்குகள் பெறாத காரணத்தினால் வேறு எந்த சங்கத்திற்கும் கூட்டு ஆலோசனைக்குழுவில் இடமில்லை. JCMல் சென்ற முறையை விட BSNLEU ஒரு இடத்தை இழந்தும்... NFTE ஒரு இடத்தைக்  கூடுதலாகவும் பெற்றுள்ளது.

தோழர்களே... 
தேர்தல் திருவிழா முடிந்துள்ளது.
சங்கங்கள் வெற்றி பெற்றுள்ளன.
இன்று மிகுந்த இக்கட்டான சூழலில் 
நிறுவனமும் ஊழியர்களும் உள்ளனர்.
தொழிற்சங்கங்கள் வெற்றி பெறுவது பெரிதல்ல...
தொழிலாளர்கள் ... வெற்றி பெற வேண்டும்..
தொழில் நிறுவனம் வெற்றி பெற வேண்டும்..
இழந்த நம் பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும்...
பறிக்கப்பட்ட நம் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்...
அந்த திசை வழியில்... 
நிறுவனம் காத்திட... ஊழியர் நலன் காத்திட...
மீண்டும் ஒற்றுமையுடன் அனைவரும் பயணிக்க வேண்டும்... 
இதுவே வாக்களித்த சாதாரண தோழனின் எதிர்பார்ப்பு...

No comments:

Post a Comment