சங்க அங்கீகார விதிகள்
BSNL நிறுவனத்தில் இதுவரை 8 உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. முதல் 5 உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்கள் வரை
ஒரு சங்கம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு வந்தது.
இரண்டாவது தேர்தலில் NFTE சங்கம் தோல்வியைத் தழுவிய பின்
பல சங்க அங்கீகார முறை அமுல்படுத்தப்பட வேண்டும்
என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டது.
எனவே ஆறாவது தேர்தலுக்கு முன்பாக பல சங்க அங்கீகாரம் என்ற கோரிக்கையின் அடிப்படையில் BSNL சங்க அங்கீகார
விதிகளைத் திருத்தி 26/12/2012 அன்று உத்திரவிட்டது.
இன்று வரை 2012 சங்க அங்கீகார விதிகளே நடைமுறையில் உள்ளன...
2012 சங்க அங்கீகார விதிகளின்படி...
உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும். முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்கும் சங்கங்கள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.
50 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெறும் சங்கம்
அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாக அறிவிக்கப்படும்.
ஒரு சங்கம் 50க்கும் அதிகமாக வாக்குகள் பெற்றால்
இரண்டாவது சங்கத்திற்கு அங்கீகாரமில்லை.
எந்தவொரு சங்கமும் 50 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெறாத நிலையில்... 35 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்ற சங்கம் முதன்மைச் சங்கமாக அறிவிக்கப்படும்.
15 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்ற இரண்டாவது சங்கம் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது சங்கமாக அறிவிக்கப்படும்.
இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும்
எல்லாவிதத்திலும் இணையாக நடத்தப்படும்.
எந்தவொரு சங்கமும் 35 சத வாக்குகள் பெறாத நிலையில் 15 சதத்திருக்கும் கூடுதலாக வாக்குகள் பெற்ற இரண்டு சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக அறிவிக்கப்படும்.
மாநிலங்களில் 50 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெறும் சங்கம்
அகில இந்திய அளவில் அங்கீகாரம் பெறாவிட்டாலும்
மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக செயல்படும்.
அகில இந்திய அளவில் 2 சத வாக்குகள் பெற்ற சங்கங்களுக்கு
சந்தா பிடித்தம், தகவல் பலகை வைத்துக்கொள்ளுதல் போன்ற
குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.
JCM கூட்டு ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்
வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நடைபெறும்.
7 சத வாக்குகள் பெறும் சங்கங்களுக்கு ஒரு உறுப்பினர் என்ற அளவில் JCM உறுப்பினர் எண்ணிக்கை அமையும்.
JCM உறுப்பினர் எண்ணிக்கை 15ல் இருந்து 14 ஆக குறைக்கப்படுகிறது.
முதன்மைச் சங்கத்திற்கு JCM செயலர் பதவியும்...
இரண்டாவது சங்கத்திற்கு JCM தலைவர் பதவியும் வழங்கப்படும்.
தோழர்களே...
தற்போது நடந்து முடிந்த தேர்தலில்
NFTE மற்றும் BSNLEU சங்கங்கள்
35 சதத்திற்கு கூடுதலாகவும்
50 சதத்திற்கு குறைவாகவும் வாக்குகள் பெற்றுள்ளன.
35 சதத்திற்கு மேல் 50 சதத்திற்கு கீழ்
இரண்டு சங்கங்கள் வாக்கு பெற்றால்
அங்கீகார நிலை என்ன என்பதைத் தற்போதைய
அங்கீகார விதிகள் தெளிவுபடுத்தவில்லை.
JCM உறுப்பினர் நியமனத்தைப் பொறுத்தவரை
அங்கீகாரம் என்பது அவசியமில்லை.
அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் கூட
7 சத வாக்குகள் பெற்றால் JCMல் இடம் பெற இயலும்.
JCM உறுப்பினர் நியமனம் என்பது பெற்ற வாக்குகளின்
விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே நடைபெறும்.
எனவே தற்போதைய சங்க அங்கீகார விதிகளின்படி...
BSNLEU முதன்மைச் சங்கமாகவும்...
NFTE இரண்டாவது சங்கமாகவும்..
JCMல்...
BSNLEUவிற்கு 8 இடங்களும்..
BSNLEUவிற்கு 8 இடங்களும்..
NFTEக்கு 6 இடங்களும் ஒதுக்கப்படும்.
எங்கும்... எதிலும்...
விருப்பம் என்பது வேறு...
விதிகள் என்பது வேறு...
No comments:
Post a Comment