துரத்தும்... துயரம்
ஆறேழு மாதங்களாக சம்பளம் இல்லாமல்
அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் ஒப்பந்த ஊழியர்களின்
ஒட்டிய வயிற்றில் மேலும் ஓங்கி அடித்துள்ளது BSNL நிர்வாகம்.
30/09/2019 அன்று சிக்கன நடவடிக்கை என்னும் பெயரில்
ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை
உத்திரவு என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
அந்தப் பாதக உத்திரவு இவ்வாறு கூறுகின்றது...
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகும் செலவு 50 சதம் குறைக்கப்பட வேண்டும்.
அதற்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
55 வயதிற்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை
பணியில் அமர்த்தக் கூடாது.
ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 15 நாட்களுக்கு மேல் பணி கிடையாது.
(இது கல்கத்தாவிற்கு மட்டும் பொருந்தும். மற்ற மாநிலங்களுக்கு இல்லை)
துப்புரவுப் பணிகளுக்கு ஒரு நாளைக்கு
3 மணி நேரத்திற்கு மேல் வேலை தரப்பட மாட்டாது.
காவல்பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அந்தப்பணியில் நிரந்தர ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
மேற்கண்ட சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டு
50 சத செலவினத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்த மாநிலங்களுக்கு மட்டும் ஒரு மாத சம்பளத்திற்கான
நிதி ஒதுக்கீடு வழங்கப்படும்.
தோழர்களே..
சிக்கன நடவடிக்கை என்னும் பெயரில்
மிக மிக மோசமான உத்திரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மிகக்குறைந்த கூலியில் அத்தியாவசியமான பல பணிகளை
அவர்கள் மேற்கொண்டு வந்தார்கள்.
குறைக்கப்பட வேண்டிய அநாவசிய செலவுகள் ஆயிரம் இருக்கும்போது அடிமட்ட ஊழியருக்கு வழங்கும் சொற்பக்கூலியையும் குறைத்திட நிர்வாகம் முயல்வது மிகவும் மனிதநேயமற்ற செயலாகும்.
-----------------------------------------------------------------------
மத்திய சங்கங்கள் இன்னும் அமைதி காப்பது
முறையற்ற செயலாகும். உடனடியாக நிர்வாகத்தின்
இந்தக் கொடிய உத்திரவை எதிர்த்துக் களம் காண வேண்டும்.
தலைமை என்பது கிரீடம் தாங்குவதற்கு மட்டுமல்ல...
தம்மை நம்பி வாழும் ஊழியர்களுக்கு சோதனை நிகழும்போது
தலைமை தாங்கி அவர்களைத் துன்பத்தில் இருந்து விடுவிப்பதே
உண்மையான தலைமையாகும்.
-----------------------------------------------------------------
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்
-குறள்-
No comments:
Post a Comment