ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு
ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி VDA
01/10/2019 முதல் கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.
UNSKILLED WORKERS
A பிரிவு நகரம் -
ரூ.584/-லில் இருந்து ரூ.603/- ஆக உயர்வு (523 + 80)
நாளொன்றுக்கு ரூ.19/- உயர்வு
B பிரிவு நகரம்
ரூ.487/-லில் இருந்து ரூ.503/- ஆக உயர்வு (437 + 66)
நாளொன்றுக்கு ரூ.16/- உயர்வு
C பிரிவு நகரம்
ரூ.390/-லில் இருந்து ரூ.403/- ஆக உயர்வு (350 + 53)நாளொன்றுக்கு ரூ.13/- உயர்வு
தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு
ஒரு முறை விலைவாசிப்படி உயருகின்றது.
ஆனால் BSNLலில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கோ
ஆறு மாதங்களாக சம்பளமே இல்லை.
பணிபுரியும் ஊழியர்களில் 30 சதம்
குறைக்கப்பட வேண்டும் என ஆட்குறைப்பு வேறு.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகும் செலவினத்தைக்
கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு வேறு.
இதனிடையேதான் அவர்களுக்கு
VDA என்னும் விலைவாசிப்படி உயர்ந்துள்ளது. கைக்கெட்டியது வாய்க்கெட்டும் நாள் எந்நாளோ?
No comments:
Post a Comment